இழந்ததால் இல்லாதுபோனோம்

..."" இழந்ததால் இல்லாதுபோனோம் ""...
இருப்பதனை வைத்துக்கொண்டு
இன்பமாகவே வாழ்ந்திடலாம்
என்றேதான் நாம் சொன்னாலும்
எதார்த்தமதுகிடையாது வாழ்வில்
உள்ளதை உள்நாட்டில் அடகுவைத்து
வெளிநாட்டு சுதந்திர அடிமைகளாய்
இருந்ததை நாமே தொலைந்துவிட்ட
இல்லாததை தேடியே செல்கிறோம்
வார்த்தையில் சொல்லமுடியா சோகம்
என்றும் சொல்லில்லடங்காததும் கூட
நெஞ்சம் சுமந்த பாசமதை அழுகவிட்டு
சம்பாதித்த பணமிங்கு சிரிக்கிறது,,,,
திரும்பி வந்துவிடவே ஆசையிருந்தும்
ஆயிரம் தேவைகளால் தோற்றுவிட்ட
உள்ளமதை தேற்றிக்கொண்டே ஓட்டை
படகாய் வேதனைகளோடு ஓய்வின்றி
தளர்ந்து தலைமுடியும் நரைத்துவிட
எம் தலைமுறையின் நிலையிருப்பை
சரியாய் முறைப்படுத்த முதுமையெனும்
பரிசை இளமையினை விற்று பெற்றோம்
உணர்வுகளையடக்கி உறவுக்காய் வாழ
வேண்டாம் மகனே உனக்கு இந்நிலை
உறவாய் இல்லையெனும் உருவமாய்
உலவிவா என்னுளைப்பு உயிர்பெற ,,,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....