ஆசை ஆசையாய் ஆசைகள்

.."" ஆசை ஆசையாய் ஆசைகள் ""...
எதை நான் சொல்லிவிட
பிறந்ததில் இருந்தே
நிகழ்காலம் இன்றுவரை
எத்துனை எத்துனையாம்
சின்ன பெரிய ஆசையின்
கவர்ச்சியான வலையிலே
நாமே மாட்டிக்கொண்டோம்,,,
கவலைகளை துரத்தி
சிரிக்கவும் ஆசைதான்
எதிர்கால வாழ்கையை
சிந்திக்கவும் ஆசைதான்
சிறகடிப்பதும் ஆசைதான்
சீர்படுத்தவும் ஆசைதான்
சீரழித்ததும் ஆசைதான் ,,,
ஆசைகள் இருக்கும்வரை
அழகானதே வாழ்க்கை அது
பேராசையாகிபோவதனால்
நாம் தடுக்கி விழுந்ததும்
இந்த ஆசையில்தான்
தடம்மாறியே போனதும்
அந்த ஆசையில்தான் ,,,
நாம் போராடி போராடியே
இன்னும் தீண்டா ஆசையாய்
நெஞ்சினை நெருடுகின்ற
நிறைவேறாத ஆசைகள்
நித்தமும் சாரளம் தட்டும்
இமைகள் இணைந்தாலும்
உறக்கத்தை களவாடும் ,,,
ஆசைதான் ஆசைதான்
அகிலத்தையும் ஆளுதமா
அகிலமே உடைந்தாலும்
ஆசைகள் விளகாதம்மா
முடவனுக்கு நடக்க ஆசை
குருடனுக்கு பார்க்க ஆசை
பணத்திற்கு பணமே ஆசை
ஆசைகள் அழிவதில்லை
ஆசையாய் நாமத்தை
அணைக்கும் காலம்வரை
எட்டடுக்கு மாடிகட்ட
ஏழைக்கும் ஆசையுண்டு
மாளிகையில் வாழ்பவனும்
வானம்தொட ஆசையுண்டு ,,,
இன்றும் ஆசையுடன் உங்கள்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...