அருள் தரும் ஆதவனே மருத்துவனே

அருள் தரும்
ஆதவனே
இன்றாவது வருவாயா இவ்வாழ்வில் ஒளியேற்ற
ஈரெட்டு நாட்களாக
உன் இளம் கதிரில் நடக்காமல்
ஊனமாகி போனதே என் அங்கங்கள்
எங்கள் ஊரில் இருள் அகற்றி
எழைகளின் பிணிகள் தீர
ஐம்புலன்க்கள் ஆற்றல் பெற உன்
ஒளியை கதிரொளியை உடன் அனுப்ப மாட்டயா
ஓய்வெடுதத்தது போதலியா இன்னுமா உறங்குகிறாய்
ஔவ்வை யாரும் நிலவிலிருந்து எமக்காக வேண்டுகிறாள்
ஆரோக்கியமாக வாழ நீங்கள் நாட வேண்டிய `இயற்கை’ மருத்துவர்.
காலையில் எழுந்ததும் இவரிடம் உடலைக் காட்டுவதுதான், நமது உடலை `செக்கப்’ செய்து கொள்ளும் செலவில்லாத வழி. அவர் உடனே பல வியாதிகருக்கு தடுப்பு மருந்தை உடலில் செலுத்தி விடுவார். காசு எதுவும் கேட்க மாட்டார். அந்த டாக்டர் வேறு யாருமல்ல `. இளைய சூரியன்தான்
சருமத்திற்கு பொலிவு தருகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு பணியைச் செய்யும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகம் உற்பத்தியாக உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சூரிய ஒளி, உணவு செரிமானத் தன்மையை அதிகரிக்கிறது. கழிவுகளை வெளியேற்ற உதவும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் துணை புரிகிறது. * உடல் ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் `வைட்டமின் டி` கிடைக்கச் செய்கிறது. சமீபத்திய ஆய்வில், மாலை இளம் வெயிலில் நடைபயணம் செய்வது ஆண்மை வீரியம் கிடைக்க உதவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. * காலை மாலை இளம் வெயிலின் மூலம் உடலில் சூரிய ஒளி படுவதால் புற ஊதாக் கதிர்கள் உடலில்படும். அது வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. * * ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் காலை, மாலை இளம் வெயிலில் சிறிது நேரம் அதாவது குறைந்தது 10 நிமிடங்கள்) உலவும் படியான பணிகளைச் செய்தாலே போதும். இந்த நன்மைகளெல்லாம் கிடைத்துவிடும்