தசரதன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தசரதன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  21-Jul-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Feb-2014
பார்த்தவர்கள்:  413
புள்ளி:  113

என்னைப் பற்றி...

நல்ல கவி எழுத முயற்சிக்கிறேன்

என் படைப்புகள்
தசரதன் செய்திகள்
தசரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2014 12:57 pm

உடைந்திராத நீர்குமிழியில்
பொக்கிஷமாய் என் கனவுகளை
புதைத்து வைத்தேன்...

வண்ணநிற பந்தினால்
வண்ணமாகிறது என் கனவுகள்...

வண்ணங்கள் வாழ்க்கையில் அழகு..
என் கனவுகளும் அழகு...

உயரே உயரே பறக்கட்டும்
உடைந்திராத நீர்குமிழி..

மேலும்

நீர் குமிழியில் புதைத்த கனவுகள் அருமை... 22-Mar-2014 3:40 pm
தசரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2014 11:41 am

ஒரு நாள் குருவிகள் வாழ்ந்தது
இன்னொரு நாள் காடுகள் வாழ்ந்த்து
இன்னொரு நாள் கவிதை வாழ்ந்தது

ஏதோ ஒன்று வாழ்கிறது...
என்னைத் தவிர
எல்லாம் வாழ்கிறது
என எழுதி முடிக்கையில்

உங்கள் ஆராவாரமும்..
உங்கள் கைத்தட்டலும்..
என்னை கர்வம் கொள்ள வைக்கிறது...

எதுவுமே வீழ்வதில்லை
எதுவுமே அழிவதில்லை....
எல்லாம் வாழ்ந்துக் கொண்டுதான்
இருக்கிறது...

இல்லை என நான் மட்டும்
பொய் உரைக்கிறேன்...
பொய் கவிஞனுக்கு அழகு தான்...

மேலும்

தசரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2014 9:50 am

நிராயுதபாணியாக நிற்கிறேன்...

விழிகளால் வில்லைப் பூட்டுகிறாய்..
வலி தங்குவேனா...?

மேலும்

தசரதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 6:43 pm

என் கோரிக்கைகள்
எனக்கு என்பதாலே
நிராகரிக்படுகின்றன.....

நிரப்பிட முடியாத
இடைவெளி....
இருவருக்கும் சாத்தியமில்லை...

ஒன்று..
என்னை தோற்கவிடு... இல்லையேல்
என்னை ஜெயித்துவிடு...

இரண்டு பேருக்கும்
இடையேயான இடைவெளியில்..
இன்னொரு வெற்றிடத்தை நிரப்பாதே...

கான வெளியில்
கானல் நீரில் தாகம்
தணிக்கும் முயற்சியில்

நீயும் நானும்.....

மேலும்

அகர வெளி அளித்த கேள்வியில் (public) asmani மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Mar-2014 5:06 pm

எழுத்து.காம் தளத்தில் சுயவிவரப் பகுதியில் வாசகர்,எழுத்தாளர்,தமிழ் பித்தன்,நடுநிலையாளர்,பரிசுப்பெற்றவர் என்றெல்லாம் உள்ளதே,எதை வைத்து இது தீர்மானிக்கப்படுகிறது? யாரால் தீர்மானிக்கப்படுகிறது?

மேலும்

நன்றி அய்யா...! 20-Mar-2014 7:48 am
இந்தப் பதிலுக்கு நாளை -2 விழும் பாருங்கள்! 18-Mar-2014 10:49 pm
சிறந்த எழுத்தாளர்கள் சிலரைத் தேர்வு செய்து நடுநிலையாளராக்கி இருக்கிறார்களா? ..... சரிதான், காமெடி எதில்தான் பண்ணுவது என்று கணக்குக் கிடையாதா? .... எனக்குத் தெரிந்தவரை சீனியர் சிடிசன்தான் அப்படி இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குமரியண்ணன் நடுநிலையாளர் ஆக இன்னும் 25 வருசமாவது ஆகும் போல இருக்கே! ..... 18-Mar-2014 10:41 pm
தாராளமாக போட்டு கொள்ளுங்கள்..! 17-Mar-2014 10:46 pm
தசரதன் - தசரதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2014 12:33 pm

ஏகாதிப்பத்தியம் எதிர்ப்பு
ஏலத்திற்க்கு...
திராவிட கட்சிகளால்..
தெருமுனையில் பிச்சை எடுக்ககூட
வக்கற்று நிற்க்கிறது
வர்க்க போரட்ட குழு....

வறுமையின் நிறம் இனி
நிரந்தர சிவப்பு..
காம்ரேட்டுகளுக்கும்...

முதல் கட்ட தலைவர்களின்
மெத்தனம்.. போராடமுடியாத
வயோதிகர்கள்....

சுத்தியலைக் கொண்டு
சுத்தம் செய்தது போதும்...
கட்சியின் மானம்
காக்க செங்கொடியினை
கோவனமாக்குங்கள்....

மேலும்

நல்ல சாட்டையடி போலி கம்யூனிஸ்டுகளுக்கு ... அதுவும் காரியம் சாதிக்க நினைக்கும் முதல் கட்ட தலைவர்களுக்கு ...தன்னலமிக்க அந்த தலைகளுக்கு ...பாவம் உண்மை தொண்டர்கள் , காம்ரேட்கள் ... 07-Mar-2014 1:21 pm
ஓ அப்டி ஓகே ஓகே........ வார்த்தைகள் உண்மைதான் தோழரே! 07-Mar-2014 12:46 pm
வலுவான கம்னிஸ்ட் இருந்தும் முதல் கட்டதலைவர்கள் கட்சியினை அவமான படுத்தி விட்டனர் சகோதரி.. 07-Mar-2014 12:43 pm
அரசியலுக்கு இப்டியா?????????? 07-Mar-2014 12:38 pm
தசரதன் அளித்த படைப்பில் (public) Gopi1987 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Mar-2014 7:49 pm

வைக்கோல்கள் மலிவு விலையில்
விற்பனைக்கு...
விவசாயம் மரணப் படுக்கையில்..

விதி வந்து செத்தான் என்பார்கள்
இனி,
உணவு இல்லாமல் செத்தான் என்பார்கள்

மேலும்

நன்றி நட்புகளே... அரசாங்கம் 120 இடங்களில் தமிழகத்தில் மலிவு விலையில்(!!!!) வைக்கோல் கொடுக்கிறது. 05-Mar-2014 10:14 pm
அருமை.. 05-Mar-2014 10:05 pm
அருமை சகோ....! இன்னும் சிறிது காலம் மழை குறைந்தால் நடக்கத்தான் போகிறது பட்டினி சாவு....! 05-Mar-2014 9:59 pm
உண்மைதான் 05-Mar-2014 8:17 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 17 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Feb-2014 12:57 am

வெள்ளைமனம் கொண்ட
காகிதத்தின் கன்னத்தில்
எழுதுகோல் முத்தம்
தர தயாரான நேரம் !!

என்னவள் முறைத்தால் - என்
எழுதுகோல் மீது பொறாமை கொண்டு !

வரிக்கு உயிர் தரும்
என் எழுதுகோல்
என்னவளைப் புரிந்து

வசந்தம் தரும்
கரத்தை விட்டு - மெல்ல சரிந்து
மேசை மீது - மௌனமாய் நின்று
காதல் செய்தாள் காகிதத்தை !!

என்னவள் எனை பார்க்க
மறந்து போனேன்
நினைவில் நின்ற வரிகளை !!

அருகில் அமர்ந்தாள் - நான்
நிலைகுலைந்த நேரமது !!

ஒற்றை காலில் காதல் செய்த
எழுதுகோல் சற்று
தடுமாறிய ஓசையுடன்
என்னவளை ஏனோ முறைத்தாள் !!
எழுதுகோலை இடையுறு செய்தது
என்னவள் தான் போலும் ..!!

சன்

மேலும்

சூப்பர் நண்பா 02-Apr-2015 3:32 pm
நன்றி பல தோழமையே தங்கள் வரவிலும் கருத்து பதிவிலும் மகிழ்ச்சி தங்கள் கருத்து மேலும் என்னை மேம்படுத்த உதவும் என்றும் அன்புடன் நான் .. 25-Feb-2014 2:58 pm
தங்கள் வரவிலும் கருத்து பதிவிலும் மகிழ்ச்சி நண்பரே தங்கள் கருத்து மேலும் என்னை மேம்படுத்த உதவும் என்றும் அன்புடன் நான் 25-Feb-2014 2:56 pm
தங்கள் வரவிலும் கருத்து பதிவிலும் மகிழ்ச்சி தோழமையே தங்கள் கருத்து மேலும் என்னை மேம்படுத்த உதவும் என்றும் அன்புடன் நான் 25-Feb-2014 2:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
சௌந்தர்

சௌந்தர்

கோவை (தற்போது மதுரை)
sivagiri

sivagiri

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (50)

சிவா

சிவா

Malaysia
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (50)

செல்வக்குமார் சங்கரநாராயணன்

செல்வக்குமார் சங்கரநாராயணன்

மதுரை ,சிந்துபட்டி
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மேலே