தினம் ஒரு நாள்
ஒரு நாள் குருவிகள் வாழ்ந்தது
இன்னொரு நாள் காடுகள் வாழ்ந்த்து
இன்னொரு நாள் கவிதை வாழ்ந்தது
ஏதோ ஒன்று வாழ்கிறது...
என்னைத் தவிர
எல்லாம் வாழ்கிறது
என எழுதி முடிக்கையில்
உங்கள் ஆராவாரமும்..
உங்கள் கைத்தட்டலும்..
என்னை கர்வம் கொள்ள வைக்கிறது...
எதுவுமே வீழ்வதில்லை
எதுவுமே அழிவதில்லை....
எல்லாம் வாழ்ந்துக் கொண்டுதான்
இருக்கிறது...
இல்லை என நான் மட்டும்
பொய் உரைக்கிறேன்...
பொய் கவிஞனுக்கு அழகு தான்...