சிறைமீட்ப்பதெப்போம்
என் கணவனே!
நான்.....
இன்று வரைக்காதலிக்கவில்லை
உன்னை மட்டும்
காதலிக்க வேண்டுமென்பதற்காக..!
காதலிப்பதை விட
காதலிக்கப்படுவதில் தான்
சுகமதிகமாம்.... என்று
வருகிறாய் என்னைக்காதலிக்க...?
நான் வயதுக்கு வந்து
நேற்றோடு நிறைவடைந்தது
நான்காண்டு..!
இன்னுமா.... நீ
பெண்கேட்க புறப்படவில்லை...?
தாய்விட்டுச் சிறையிலிருந்து
உன் வீட்டுக்கு... என்று
மீட்கப் போகிறாய் என்னை....?
என் ராமனே!
நானும் சீதையாய் தான்
வாழ்கிறேன்....
என்னை மீட்டுப்போக
என்று வருகிறாய்...?
இப்படிக்கு
நதினான்..