முடிவு சொல்
என் கோரிக்கைகள்
எனக்கு என்பதாலே
நிராகரிக்படுகின்றன.....
நிரப்பிட முடியாத
இடைவெளி....
இருவருக்கும் சாத்தியமில்லை...
ஒன்று..
என்னை தோற்கவிடு... இல்லையேல்
என்னை ஜெயித்துவிடு...
இரண்டு பேருக்கும்
இடையேயான இடைவெளியில்..
இன்னொரு வெற்றிடத்தை நிரப்பாதே...
கான வெளியில்
கானல் நீரில் தாகம்
தணிக்கும் முயற்சியில்
நீயும் நானும்.....