கலங்கரை விளக்கு

..."" விளக்கு கலங்கரை விளக்கு ""...

திசைதெரியா திரைகடலில்
திரவியத்தை தேடிவிட
துணிவின் துணையோடும்
துடுப்பின் இணையோடும்
உந்தனின் வழிகாட்டல்,,,

நிலத்தின் நிலவாக நீ
கடலுக்குள் சென்றோரை
பத்திரமாய் வரவழைக்க
கடல்கரையின் வாயலில்
ஒற்றைக்கால் தவமிருப்பு,,,

அஃறிணையின் அன்புள்ளம்
அரவணைக்கும் பண்போடு
வாராய் நீ வாராயென்று
அலைமீதே ஒளிபதித்து
கண்களை சிமிட்டுகிறாய் ,,,

தொடர்பு எல்லைக்கும்
அப்பால் அன்னம்தேடி
ஆழ்கடலின் பயணம்
வழிகாட்ட காத்திருப்பதால்
கவலையில்லை எமக்கு ,,,

ஒளிகாட்டும் உயர்ந்தவனே
உன் சேவைக்காய் நாம்
சின்ன பெரிய அலைகளை
தூதுவிட்டு உன் கால்களை
முத்தமிட பணித்துவிட்டோம்,,,

அன்பு நிறைந்த அன்னையும்
மனம் நிறைந்த மனைவியும்
பாசம் நிறைந்த பிள்ளையும்
எதிர்பார்த்தே இருப்பதுபோல்
நீயுமதில் இணைந்துகொண்டாய் ,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (16-Jan-16, 1:36 pm)
Tanglish : kalangarai vilakku
பார்வை : 262

மேலே