தமிழ்த் திருநாள் மூன்றாம் நாள்

இன்று மன்மத வருடம் தைப் பொங்கல் திருநாள்

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் -ஆம்

வருடம் முழுதும் வயலிலும் பின்னே வெளியிலும்

தம் பிள்ளைகளுக்கொப்பாய் தாங்கி பணிசெயும்

கறவைகளுக்கு உழவர்பெருமக்கள் மகிழ்ச்சியோடு

நன்றி தெரிவிக்கும் குதுகூல நாள்.



இன்று வீட்டு மாட்டுக்கு நீராட்டி

அவற்றின் வலிந்த நீண்ட கொம்பிற்கு

அழகு வண்ணம் பூசுவர் பின்னே

அவற்றிற்கு பொங்கலும் கரும்பும்

உணவாக தந்து அந்தி சாயும் முன்னே

தங்கள் வண்ண வண்ண மாடுகளுடன்

எடுப்பாய் வீதி உலா வருவர்

நல்ல நெல் விளைவிற்கும் அறுவடைக்கும்

மாதம் மும்மாரி தந்த ஆதவனுக்கு

பொங்கல் படைத்து நன்றி தெரிவித்த உழவர்

தங்களை வாழ வைக்கும் கறவைக்கும் இங்ஙனே

நன்றி தெரிவித்து ஆனந்தம் அடைந்தனர்

மாட்டு பொங்கலும் இனிதே நிறைவுற்றது.

எழுதியவர் : வசவன்-தமிழ்பித்தன்-vasudevan (16-Jan-16, 5:02 pm)
பார்வை : 73

மேலே