இருவரும்

ஒரு விதத்தில்
ஏழையும்
செல்வந்தன்தான்-
அவனிடம்
அதிகமாகவே உள்ளது
பசி, பட்டினி..

பணக்காரனும் ஓர்
ஏழைதான்-
பாவம்,
அவனுக்குப்
பசியே இல்லை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jan-16, 6:14 pm)
Tanglish : iruvarum
பார்வை : 103

மேலே