மரணம்

அடை மழையும்
சிறு தூரலாய்
பெருங்காற்றும்
சிறு அசைவாய்
உணர்வின்றியே நடக்கிறேன்!

மனதில் வீசுகின்ற புயலின்முன்
உடலைத் தொட்ட புயல்
ஒன்றுமே இல்லாதது போல்
கண்ணில் பெருக்கெடுத்த
வெள்ளத்தின் முன்
கனமழையெல்லாம் கானல் நீரே
அடங்காது கலங்கும் இதயம்
அடங்கிடும் மழையில் மரணம்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Jan-16, 6:51 pm)
Tanglish : maranam
பார்வை : 108

மேலே