இன்பமான இரவு

பனி பொழியும் அமைதியான இரவு,
பல வண்ண கனவு முளைக்கும் நேரம்,
பசுமையான நினைவு தாக்கும் நேரம்,
பளிச்சிடும் வர்ணஜாலமே தோன்றும் கண்ணில்,
இதமான குளிர்க்காற்று,
இதயத்தோடு கவிப்பாட,
இளமை என்ன ? முதுமை என்ன ?
இனிமையான நினைவுகள் தழுவிடும் அனைவருக்கும்,
நினைவுகள் அலையாய் எனை மோத,
நிஜமும் மறந்து பறந்தேன் கனவுலகில்,
குளிர்க்காற்று என் கூந்தலினை வருட,
கனவு அது களைந்தபடி,
"கண்டது கனவா ? என்று தலையினில் அடித்துக்கொண்டேன்,
சின்ன புன்னகையால் என் இதழ் மலர,
செல்லம் என்று சொன்னபடி தலையணை அணைத்தேன்,
சில்லென்று காற்று முகத்தினை தழுவ,
சிலிர்ப்புடன் முகம் மறைத்தேன் அவன் நினைவோடு,
தா என்று காற்று தலையணை இழுக்க,
தர மாட்டேன் போ என்று ஜன்னலினை அடைத்தேன்,
தள்ளாடி அது அங்கும் இங்கும் அசைந்தாட,
தாலாட்டு பாடு தருகிறேன் என்றேன்,
தலையணை வாங்க பாடல் அது பாட,
தாலாட்டாக ஓசை மட்டுமே கேட்டது அதில் வார்த்தையில்லை,
இரவு அது இரவு,
இனிமையான பொன் நிலவை கொண்ட இரவு,
இரவல் வாங்க முடியாத பல கனவுகள் காணும் இரவு,
காற்று அது தலையினை கோத,
நிலவு அது தாலாட்டு பாட,
வெள்ளி அது கையினை கோர்த்து,
உறங்க வைக்கும் வான மெத்தையிலே !!!