இன்றைய பொங்கல்

ஏர் களப்பை இல்லை !
எருதுகள் ஏதுமில்லை !
கதிர் அருவா இல்லை !
கதிரருப்போர் யாருமில்லை !!
மண் பானையிலே.......
வெண்பொங்கல்
பொங்கவில்லை!
மாட்டு வண்டியில்லை !
மனித இனத்தில் நேயமில்லை !
அரிசி மாவிலே ......
அழகான கோலமில்லை !
வாழை இலை வைத்து
வழிபாடு ஏதுமில்லை !
ஆடு மாடுகள்கூட
இல்லங்களில் இருக்கவில்லை
சொந்த பந்தங்கள் கூட
சேர்ந்து உண்ண வழியில்லை
சோற்று பிண்டமாய் !
சுகம்காணும்.........
இன்றைய தமிழா ?
தொலைக்காட்சி .......
பெட்டியருகே தொலைந்ததடா
உன் வாழ்க்கை ?
சீரியல் மோகத்திலே
சிதைந்ததடா!
இல்வாழ்க்கை !
ஏனடா ?இவ்வழக்கை
எண்ணி பார்க்க நேரமில்லை !
இயந்திர வாழ்க்கையாய் ?
இன்றைய பொங்கல் .......
இனிக்கவில்லை !
பண்டைய தமிழரின் பண்பாடு
இன்றை தமிழரிடம்
இருக்கவில்லை !

எழுதியவர் : இரா .மாயா (16-Jan-16, 12:17 pm)
Tanglish : indraiya pongal
பார்வை : 94

மேலே