மன்னை மாயா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மன்னை மாயா
இடம்:  இரெட்டியூர்
பிறந்த தேதி :  12-Jul-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Oct-2013
பார்த்தவர்கள்:  126
புள்ளி:  114

என்னைப் பற்றி...

நான் ஒரு புகைப்பட கலைஞன் கவிஞர் பாடலாசிரியர் பாடகர் செய்தியாளர் அதிகமாக கவிதை எழுதுவது விழிப்புணர்வு பாடல் எழுதி பாடுவது (திரைப்படத்தில் இரு பாடல் படியுள்ளேன் ) மேடை பாடகர் பத்திரிக்கை செய்தியாளர்

என் படைப்புகள்
மன்னை மாயா செய்திகள்
மன்னை மாயா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2023 5:10 am

*எல்லாம் மாறும்*
*கடந்து செல்*

இரவும்
பகலும் இல்லாமல்
உலகமில்லை

பிறப்பும்
இறப்பும் இல்லாமல்
உயிர்கள் இல்லை

ஏற்றம்
இறக்கம் இல்லாமல்
வாழ்க்கை இல்லை


இரண்டும் கலந்துதான்
வாழ்க்கை....
மனிதா....
கடந்து செல்...

கவிஞர்.....
*மன்னை மாயா*

மேலும்

மன்னை மாயா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2023 8:37 am

*முயற்சி*...
.
பஞ்சை...
நூலாக்குவது..
முயற்சி

நூலை....
துனியாக்குவது
முயற்சி

மண்ணை....
பானையாக்குவது
முயற்சி

பொன்னை....
நகையாக்குவது
முயற்சி

கல்லை.....
சிலையாக்குவது
முயற்சி


இப்படி.....
முயன்றால்
இவ்வுலகில்....
முடியாதது எதுவுமில்லை
மனிதா...
முயற்சி செய்.....

கவிஞர்....
*மன்னை மாயா*

மேலும்

மன்னை மாயா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2023 8:39 am

*ஒரு நாள் நிச்சயம்*
*மாறும்*

ஆற்றுக்கு.....
எவரும் வழி சொல்ல தேவையில்லை....
தானாக...ஓடும்!

காற்றுக்கு......
எவரும் திசை சொல்ல தேவையில்லை...
தானாக வீசும்!

காய்க்கு......
எவரும் கற்றுக் கொடுக்க தேவையில்லை
தானாக கனியும்!

சூரியனுக்கு..
எவரும் சுவிட்ச் போட
தேவையில்லை
தானாக.. ஒளிரும்!

பூவுக்கு
எவரும்.புத்திசொல்ல
தேவையில்லை
தானாக பூக்கும்!

பறவைக்கு......
எவரும் பயிற்சி கொடுக்க தேவையில்லை
தானாக பறக்கும்!

இப்படி.....எல்லாமே
தானாக மாறும்
ஒவ்வொரு விடியலும்
மாற்றங்களே.....
மனமே.....வருந்தாதே!....

கவிஞர்.....
*மன்னை மாயா*

மேலும்

மன்னை மாயா - மன்னை மாயா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2020 10:59 am

*கண்ணுக்கு தெரியாத வைரசே*
*ஒன்ன கையெடுத்து*
*கும்பிடுறோம்*



ஏலே தம்பி..
பொழுது விடிஞ்சிடிச்சி!
பெருந்தூக்கம்
போயிடிச்சி!
எழுந்து வெளியே
வாடா?
இன்னொரு
உலகை கான

வீட்டுக்கு வெளியே...நீயும்
விளையாட்டா
போயிடாத!
கொரோனா
வைரசுக்கு
மனுசன் கொத்து கொத்தா மடியுரானான்
கொடிய விசாதின்னு
கூவி கூவி கத்துராங்க!

வீதிய சுத்தம்
செஞ்சி
வெள்ளையா
மருந்து போட்டு
ஒலி பெருக்கி வச்சி!
ஓயாம கத்துராங்க!


காக்கி சட்டை போட்ட
காவலரும் சுத்துராங்க!
கடைவீதியில் கண்டுபுட்டா
கண்டபடி அடிக்குறாங்க!

நாடு நடுங்குதப்பா!
நல்ல தூக்கம் இல்லையப்பா!
உலகம் கலங்குதப்பா!
ஊனுரக்கம் இல்லையப்பா!
சைனா காரனால
சஞ்சலமும் வந்ததப்பா!

தாய் தங்

மேலும்

மன்னை மாயா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2020 6:54 pm

பாலும் பழமும் பஞ்சனைசுகமும்
தேனும் தினையும்
திகட்டாத சுவையும்
நாளும் பொழுதும்
நாயகி தந்திட
பஞ்சனை விரித்து
நெஞ்சனை அனைத்து
கொஞ்சும் பொழுதினை
கோலமயில் தந்திட
பனியில் முகம் கழுவி
பவனிவரும் நிலவு போல
அழகுநிலையத்தில்
அழகாய் முகம்துடைத்து
உலர்ந்த கூந்தலை ஒழுங்காக தலைவாரி
அல்லிமுடித்த கூந்தலில்
முல்லை பூச்சூடி
புதுச்சேலை உடுத்தி
பூமகள் வரும் அழகில்

தொடரும்.....

கவிஞர்.....
மன்னை மாயா

மேலும்

மன்னை மாயா - மன்னை மாயா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2020 5:02 pm

தன்னம்பிக்கை


கூடு கட்டுவதற்கு
குருவிகள் ஆட்களை
அழைப்பதில்லை!

வலை பின்னுவதற்கு
சிலந்திகள் பல வருடங்கள்
எடுப்பதில்லை!

தேனை சேமிக்க
தேனீக்கள் பாத்திரங்கள்
கேட்பதில்லை!

புயல் வருவதென்று
மரங்கள் முளைக்காமல்
இருப்பதில்லை!

அலகு உடைந்து விடுமென்று
கிளிகள் மரங்களை
கொத்தாமல் விடுவதில்லை!

முதுமை வந்ததென்று
விலங்குகள் முடங்கியா? இருக்கிறது!

கோலை நட்டு வைத்து விட்டா?
கொடிகள் முளைக்கிறது?

முடியாது என்று
நினைத்து விட்டால்
வண்டுகள் மூங்கிலை
துளையிடுமா?

விழுந்து விடுவோம்
என் என்னியா?
வவ்வால்கள் தலைகீழே தொங்குகிறது

சிந்தித்தால் கவிதை!
சந்தித்தால் காதல்!
விழுந்தால் விதை!
எழுந்தால் வீரம்!

பாதம் ப

மேலும்

மன்னை மாயா - மன்னை மாயா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2019 5:42 pm

*அனாதை இல்லங்கள்*


வேற ஊருலதான்
வேல கெடச்சுதுன்னு
தாயி தகப்பன தனியாக விட்டுவிட்டு
தாரம் குழந்தையோட
தனிக்குடித்தனம்
போனவனே

மகன பிரிஞ்சிருக்க
பெத்த மனசுக்கு
முடியலையே!
பேரக்குழந்தைகள
பார்க்க
வழியில்லையே!

பெத்த மனசுக்குள்ள
அந்த கவல இருக்குதய்யா
நித்தம் ஒன் நெனப்பில் என்உசுரு
உருகுதய்யா!

அக்கா தங்கை என
ஆனந்தமாய் இருந்த
வீடு இப்போ.....
ஆளுக்கொரு தேசமாக
அனாதைகளாய்
ஆகிவிட்டோம்!

மூத்த மகனுக்கு
சென்னையில்
வேலையின்னு......
அக்கா புருஷனுக்கு
அமெரிக்காவில் வேலையின்னு......
சின்ன மகனுக்கு
சிங்கப்பூர் வேலையின்னு.......
ஆளுக்கொரு தேசத்தில

சொந்த வீட்டுல தான்
இப்போ

மேலும்

மன்னை மாயா - மன்னை மாயா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2019 7:15 pm

*அம்மாவுக்கு*
*சுர்ஜித்* *கடிதம்* ...........


ஆழ்துளை கிணறு-என்று
அறியாமல் விழுந்து விட்டேன்....

குழிக்குள் இருந்து கொண்டு
கூப்பிடுற
என் குரல் சத்தம்
கேட்கலையோ?

ஆழ்துளை கினத்துக்குள்ள
அம்மா!- என்
அலறல் சத்தம்
கேட்கலையா?

யாராரோ.......
கூப்பிடுற
சத்தம் வந்து கேட்குதம்மா!
உன் ஆராரோ
சத்தம் இனி
எப்பொழுது கேட்பேனம்மா?

என் பிஞ்சு முகம் பார்த்து- உன்
நெஞ்சோடு அணைப்பாயே!
இனி உன் முகம்
பார்க்க........
எனக்கு
ஒரு பொழுதும்
இல்லையம்மா?

பசிச்ச வயிற்றுக்கு
பாலூட்டும்- தாயே நீ
உன் மாருலயும்
பால் குடிக்க
மாதவம் இனி
இல்லையம்மா?

ஒரு நிமிஷம்
காணலன்னா?
ஓடிவந்து

மேலும்

மன்னை மாயா - பிரகாஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2016 7:25 pm

அம்மாவாசை இருட்டில்
நிலவை பார்ப்பது சாத்தியமா
என்ற கேள்விக்கு

அவள் புர்காவில் சிக்கியிருக்கும்
கண்களை பார்த்தல் பதில்
கிடைக்குமோ என்னவோ???

என்றும்
நட்புடன்
பிரகாஷ் (எ) பிராகி நும்

மேலும்

நிச்சயம் கிடைக்கும் நண்பரே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2016 7:20 am
உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழரே 11-Nov-2016 8:00 pm
அருமையானா கற்பனை நண்பா 11-Nov-2016 7:35 pm
மன்னை மாயா - மன்னை மாயா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Nov-2016 7:11 pm

ஏனடி பெண்ணே .......
என்னையும் 1000,500
கரன்சி நோட்டுகளாய்
செல்லாதவனாயக்கிவிட்டாய்
என்ன கோபம்

மேலும்

கருத்து பகிர்வுக்கு நன்றி 11-Nov-2016 6:34 pm
பொருளாதாரம் மாற்றம் ஒரு வேளை இருக்கலாம் போல 10-Nov-2016 11:12 am
மன்னை மாயா - மன்னை மாயா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2016 7:44 pm

பிளாஸ்டிக் கப்பு.....
வாங்குவது தப்பு
மண்வளத்தை காக்கவேணும்
தப்பு பண்ணாத
மக்காத குப்பையை ...நீ
மண்ணுல போடாத
மரங்களை நட்டா ......
மழை வரும் தம்பி
சந்ததியும் இருக்க

மேலும்

என் கவிதைகளை படித்து கருத்து தெரிவித்து வரும் என் சகோதரருக்கு நன்றியையும் வணக்கத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் 08-Nov-2016 10:12 am
பேணுதலால் உலகத்தின் ஆயுளையும் மனிதனின் வாழ்க்கையையும் காக்கலாம் 07-Nov-2016 10:56 pm
மன்னை மாயா - ஜெகன் ரா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2016 3:13 pm

தனிமை

பூக்கள் தோற்கும்
உன் புன்னகை
நானும் அதை ரசிக்கிறேன்...!!!!

பூமி ஏங்கும்
உன் பாதம்பட
நானும் அதை யாசிக்கிறேன்...!!!

தேகம் தீண்ட
ஏங்கும் தென்றல்
நானும் அதை வெறுக்கிறேன் ...!!!

அங்குலம் பார்க்க
ஏங்கும் சூரியன்
நானும் அதை மிஞ்சுகிறேன்...!!!

மனித காட்டின் நடுவே
நானும் தனிமரமாய்
தனிமையை ரசிக்கிறேன்
உன் நினைவுகள் வருவதால்
உன் நினைவில் நன் வாழுவதால்....!!!!

ஜெகன் ரா தி

மேலும்

ரசனைகள் நிறைந்த காதலின் வானிலை தூறல்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2016 10:49 pm
நன்றி தோழி 07-Nov-2016 9:06 pm
அருமையான வரிகள்... 07-Nov-2016 8:47 pm
தங்கள் கருத்திற்கு நன்றி நண்பா 07-Nov-2016 8:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ராம்

ராம்

காரைக்குடி
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

ராம்

ராம்

காரைக்குடி

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே