சுர்ஜித் கண்ணீர் கடிதம்

*அம்மாவுக்கு*
*சுர்ஜித்* *கடிதம்* ...........


ஆழ்துளை கிணறு-என்று
அறியாமல் விழுந்து விட்டேன்....

குழிக்குள் இருந்து கொண்டு
கூப்பிடுற
என் குரல் சத்தம்
கேட்கலையோ?

ஆழ்துளை கினத்துக்குள்ள
அம்மா!- என்
அலறல் சத்தம்
கேட்கலையா?

யாராரோ.......
கூப்பிடுற
சத்தம் வந்து கேட்குதம்மா!
உன் ஆராரோ
சத்தம் இனி
எப்பொழுது கேட்பேனம்மா?

என் பிஞ்சு முகம் பார்த்து- உன்
நெஞ்சோடு அணைப்பாயே!
இனி உன் முகம்
பார்க்க........
எனக்கு
ஒரு பொழுதும்
இல்லையம்மா?

பசிச்ச வயிற்றுக்கு
பாலூட்டும்- தாயே நீ
உன் மாருலயும்
பால் குடிக்க
மாதவம் இனி
இல்லையம்மா?

ஒரு நிமிஷம்
காணலன்னா?
ஓடிவந்து கூப்பிடுவ
ரெண்டு...மூனு....
நாளாச்சு எப்படி?- நீ
இருக்கிறியோ?

உன் கருவறையில்
பத்து மாசம்
இருந்த நெனப்போட
பூமி-தாயின் கருவறையில்
இனி இருந்து விட்டு
போறனம்மா?

விஞ்ஞான முன்னேற்றம்
விதவிதமா வந்தாலும்.....
என்னுயிர் காக்க
என் தாய்நாட்டால்
முடியலையே...?

ஆழ்துளை கினற்றுலதான்
என் ஆயுள் முடியுனும்னு
தலையில் ஆண்டவனும் எழுதிருக்கான்
அம்மா.....நீ
அழாதே

அடுத்த ஜென்மத்தில-ஒனக்கு மகனாக
பிறந்திடுவன்
என் ஆயுள அதிகமாக்க
ஆண்டவன கேட்டிடுவன்?

கவிஞர்
*மன்னை மாயா*
காட்டுமன்னார்கோயில்

எழுதியவர் : (29-Oct-19, 7:15 pm)
சேர்த்தது : மன்னை மாயா
பார்வை : 35

மேலே