நிச்சயம் ஒரு நாள் மாறும்
*ஒரு நாள் நிச்சயம்*
*மாறும்*
ஆற்றுக்கு.....
எவரும் வழி சொல்ல தேவையில்லை....
தானாக...ஓடும்!
காற்றுக்கு......
எவரும் திசை சொல்ல தேவையில்லை...
தானாக வீசும்!
காய்க்கு......
எவரும் கற்றுக் கொடுக்க தேவையில்லை
தானாக கனியும்!
சூரியனுக்கு..
எவரும் சுவிட்ச் போட
தேவையில்லை
தானாக.. ஒளிரும்!
பூவுக்கு
எவரும்.புத்திசொல்ல
தேவையில்லை
தானாக பூக்கும்!
பறவைக்கு......
எவரும் பயிற்சி கொடுக்க தேவையில்லை
தானாக பறக்கும்!
இப்படி.....எல்லாமே
தானாக மாறும்
ஒவ்வொரு விடியலும்
மாற்றங்களே.....
மனமே.....வருந்தாதே!....
கவிஞர்.....
*மன்னை மாயா*