நெஞ்சமெல்லாம் நீயே..
காணாத உலகத்தில்
கன்னியை கண்டது போல்
ஒரு உணர்வு மிக அழகாய்..
அவளைக் கண்டதிலிருந்து
நெஞ்சமெல்லாம்
பூத்துக் குலுங்குகிறது..
பெண்ணே ஒரு முறை
உன்னை கண்டதிலிருந்து
இப்போது வரை..
என் நெஞ்சமெல்லாம் நீயடி
இதய ராணியே
சந்தோஷத்தில் மிதக்கிறேனடி..