கண்ணுக்கு தெரியா வைரஸே கையெடுத்து கும்பிடுறோம்
*கண்ணுக்கு தெரியாத வைரசே*
*ஒன்ன கையெடுத்து*
*கும்பிடுறோம்*
ஏலே தம்பி..
பொழுது விடிஞ்சிடிச்சி!
பெருந்தூக்கம்
போயிடிச்சி!
எழுந்து வெளியே
வாடா?
இன்னொரு
உலகை கான
வீட்டுக்கு வெளியே...நீயும்
விளையாட்டா
போயிடாத!
கொரோனா
வைரசுக்கு
மனுசன் கொத்து கொத்தா மடியுரானான்
கொடிய விசாதின்னு
கூவி கூவி கத்துராங்க!
வீதிய சுத்தம்
செஞ்சி
வெள்ளையா
மருந்து போட்டு
ஒலி பெருக்கி வச்சி!
ஓயாம கத்துராங்க!
காக்கி சட்டை போட்ட
காவலரும் சுத்துராங்க!
கடைவீதியில் கண்டுபுட்டா
கண்டபடி அடிக்குறாங்க!
நாடு நடுங்குதப்பா!
நல்ல தூக்கம் இல்லையப்பா!
உலகம் கலங்குதப்பா!
ஊனுரக்கம் இல்லையப்பா!
சைனா காரனால
சஞ்சலமும் வந்ததப்பா!
தாய் தங்கையெல்லாம்
தள்ளி நின்று பேசுதப்பா!
வாய்வார்த்த பேச
அச்சப்பட்டு ஓடுதப்பா!
தொட்டாலே ஒட்டிக்குமா
தொத்து நோயி வைரசாம்!
விட்டாலே
பரவிடுமா
வேகமான
வைரசாம்!
ஊரடங்கு உத்தரவு
உலகம் பூரா போட்டிருந்தும்!
வைரசே?
நீ....அடங்க மறுக்குறாயே
என்ன? நியாயம்
சொல்லு நீயும்!
எமன் தூதன் கூட
எறக்கப்பட்டு
விட்டுடு வான்
எங்கள் விட்டுவிட
இன்னுமா
எறக்கம் வல்ல!
மரத்த வெட்டி
மா தவறு செஞ்சுபுட்டோம்!
ஆத்து மணல் வெட்டி ஆக்கிரமிப்பு
செஞ்சி புட்டோம்!
இயற்கை காத்த
தவிர்த்து
ஏசிய வச்சிபுட்டோம்!
வாகணத்த உருவாக்கி
வளிமண்டலத்த
கெடுத்து புட்டோம்!
வேதிப்பொருள்
தூவி!
மண்வளத்த
தொலைச்சி புட்டோம்!
இப்படி.....
இயற்கை க்கு எதிராக
எல்லாமே
மாத்தி புட்டா?
மனித இனத்துக்கு
இப்படி ஒரு
இன்னல்
வரும்!
திருந்தி வாழ்த்துகிறோம்
திருப்பி -ஒரு
வாய்ப்பு
கொடு!
மனித இனத்துக்கு
மறுபடி..ஒரு
வாழ்க்கை கொடு
கண்ணுக்கு
தெரியாத வைரசே!
ஒன்ன.......
கையெடுத்து
கும்பிடுறோம்!
மண்ணுக்கு தேவையம்மா
மனித உயிர்!
மனமிறங்கி
விட்டு விடு!
கவிஞர்
*மன்னை மாயா*
காட்டுமன்னார்கோயில்
9842813395