ரோஜாநீ நில்சிரிபின் செல்

ரோஜா மலர்களைக் கூடையி னில்போட்டு
ரோஜாப்பூ மீதுமெல்லச் செல்லும் அழகிய
ரோஜாவே பூப்பறித்த பின்னேமெல் லத்திரும்பு
ரோஜாநீ நில்சிரிபின் செல் !

ஒ வி இன்னிசை வெண்பா ----பா வடிவம்

எழுதியவர் : கவின் சாரலன் (11-May-20, 10:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே