இத்தேவதைதான் யாரோ
வானமேஉன் நீலத்தை எல்லாம் இவளின்
இருவிழியில் கொட்டிவிட் டாயோ முகிலே
அடைக்கலம் பெற்றாயோ கூந்தல் கருமையில்
தேனீக்கள் சேர்க்காத தேனை இவளின்
இனிய இதழ்களில் சேர்த்தது யாரோ
அசைந்திடும் தேர்அஜந்தா சிற்பம் நடைபயிலும்
இத்தே வதைதான்யா ரோ ?
பல விகற்ப பஃறொடை வெண்பா -----பா வடிவம்