தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை
கூடு கட்டுவதற்கு
குருவிகள் ஆட்களை
அழைப்பதில்லை!
வலை பின்னுவதற்கு
சிலந்திகள் பல வருடங்கள்
எடுப்பதில்லை!
தேனை சேமிக்க
தேனீக்கள் பாத்திரங்கள்
கேட்பதில்லை!
புயல் வருவதென்று
மரங்கள் முளைக்காமல்
இருப்பதில்லை!
அலகு உடைந்து விடுமென்று
கிளிகள் மரங்களை
கொத்தாமல் விடுவதில்லை!
முதுமை வந்ததென்று
விலங்குகள் முடங்கியா? இருக்கிறது!
கோலை நட்டு வைத்து விட்டா?
கொடிகள் முளைக்கிறது?
முடியாது என்று
நினைத்து விட்டால்
வண்டுகள் மூங்கிலை
துளையிடுமா?
விழுந்து விடுவோம்
என் என்னியா?
வவ்வால்கள் தலைகீழே தொங்குகிறது
சிந்தித்தால் கவிதை!
சந்தித்தால் காதல்!
விழுந்தால் விதை!
எழுந்தால் வீரம்!
பாதம் பட்டால்தான்
பாதை உருவாகும்!
மண்புழுவொ மண்ணை
துளையிட்டு வாழும்போது?
மனிதா! தன்னம்பிக்கை கொள்!
நாளைய உலகம் நம்கையில்!