அனாதை இல்லம்
*அனாதை இல்லங்கள்*
வேற ஊருலதான்
வேல கெடச்சுதுன்னு
தாயி தகப்பன தனியாக விட்டுவிட்டு
தாரம் குழந்தையோட
தனிக்குடித்தனம்
போனவனே
மகன பிரிஞ்சிருக்க
பெத்த மனசுக்கு
முடியலையே!
பேரக்குழந்தைகள
பார்க்க
வழியில்லையே!
பெத்த மனசுக்குள்ள
அந்த கவல இருக்குதய்யா
நித்தம் ஒன் நெனப்பில் என்உசுரு
உருகுதய்யா!
அக்கா தங்கை என
ஆனந்தமாய் இருந்த
வீடு இப்போ.....
ஆளுக்கொரு தேசமாக
அனாதைகளாய்
ஆகிவிட்டோம்!
மூத்த மகனுக்கு
சென்னையில்
வேலையின்னு......
அக்கா புருஷனுக்கு
அமெரிக்காவில் வேலையின்னு......
சின்ன மகனுக்கு
சிங்கப்பூர் வேலையின்னு.......
ஆளுக்கொரு தேசத்தில
சொந்த வீட்டுல தான்
இப்போ சந்தோஷம்
போயிடுச்சு
முதுமை வந்துச்சின்னா
எங்களை முழுசா
ஒதுக்கிபுட்ட
செல்லு போனுலதான் ஏதாச்சும்
சேதிவருமுன்னு
பாவிமனசு இங்கு
படபடன்னு ஆகுதய்யா....
கைபேசி அழைச்சுதுன்னு
காதுல தான்
எடுத்து வச்சேன்
கம்பனி போனுயின்னு
அப்புறமா தெறிஞ்சிதய்யா
பத்தர மணியாச்சி
நித்தர வந்தாச்சு
பாய விரிச்சு வச்சு
படுக்க நான் போனேன்
செல்லு போனுமங்கே
கதறுகிற சத்தமிங்கே
ஓடிவந்து நானெடுத்து
செவியோட
சேத்து வச்சேன்
அம்மா......
என்னும் சத்தம்
என் காதுல கேட்டதுமே....
கண்ணு கலங்குதப்பா
கண்ணீரும் பெருகுதப்பா....
உள்மனசுக்குள்ள
ஒன் நெனப்பு
ஓடுதப்பா...
நல்லா இருக்கிறியான்னு
நாலுவார்த்த கேட்டமகன்
அப்பா.... இருக்குறாரா!
அவருகிட்ட
செல்ல கொடு
அஞ்சி நிமிஷம்
பேசிக்கிறேன்....
பேரகுழந்தையோட
பேச ஆசையடா
எங்க இருக்காங்க
என்னுகிட்ட பேசசொல்லு
சொல்லி முடிக்கவில்லை
நான் சொன்னது கேட்கவில்லை
டவரு கெடைக்கலன்னு
டப்புன்னு வச்சிப்புட்டான்
சிக்னல் இல்லையின்னு
சுவிட்சாப்பு
செஞ்சி சுட்டான்
முதுமை வந்துச்சின்னு
முழுசா ஒதுக்கிட்டானோ
என எண்ன தோனுதப்பா!
மனசுல பல
எண்ணங்களும்
ஓடுதப்பா
அனாதைகளாய்.......
சொந்த வீட்டுக்குள்ளே.....
சோதனைகள்
தொடருதப்பா?
கவிஞர்...
*மன்னை மாயா*
காட்டுமன்னார்கோயில்