ஆயிரம் நிலவே வா ♥️

உன் உதட்டோர புன்னகை
புன்னகை அல்ல பூந்தோட்டம்.

உன் மெல்லிய இடை.
இடை அல்ல தரையோடு விளையாடும் வானம்.

உன் அழகிய முகம்
முகமல்ல ஆயிரம் நிலவு

உன் நீண்ட கூந்தல்
கூந்தல் அல்ல கார்மேக கூட்டம்.

உன் மயக்கம் உதடு
உதடு அல்ல தேன் கூடு

உன் காந்த விழிகள்
விழிகள் அல்ல வின்மீண்கள்

உன் அபார பார்வை
பார்வை அல்ல மின்னல்

உன் ஒய்யார நடை
நடை அல்ல நாட்டியம்

உன் ஆனந்த வடிவம்
வடிவம் அல்ல வீதி உலா வரும் அலங்கார ஆடம்பர தேர்.

- பாலு.

எழுதியவர் : பாலு (4-Nov-19, 5:10 pm)
சேர்த்தது : balu
பார்வை : 258

மேலே