தனிமை

தனிமை
பூக்கள் தோற்கும்
உன் புன்னகை
நானும் அதை ரசிக்கிறேன்...!!!!
பூமி ஏங்கும்
உன் பாதம்பட
நானும் அதை யாசிக்கிறேன்...!!!
தேகம் தீண்ட
ஏங்கும் தென்றல்
நானும் அதை வெறுக்கிறேன் ...!!!
அங்குலம் பார்க்க
ஏங்கும் சூரியன்
நானும் அதை மிஞ்சுகிறேன்...!!!
மனித காட்டின் நடுவே
நானும் தனிமரமாய்
தனிமையை ரசிக்கிறேன்
உன் நினைவுகள் வருவதால்
உன் நினைவில் நன் வாழுவதால்....!!!!
ஜெகன் ரா தி