பிளாஸ்டிக் கப்பு வாங்குவது தப்பு
பிளாஸ்டிக் கப்பு.....
வாங்குவது தப்பு
மண்வளத்தை காக்கவேணும்
தப்பு பண்ணாத
மக்காத குப்பையை ...நீ
மண்ணுல போடாத
மரங்களை நட்டா ......
மழை வரும் தம்பி
சந்ததியும் இருக்கு
மழைநீரை நம்பி
ஒன்சுய நலத்தால்
மனவளமும் போச்சு
இயற்கையும் நெனெட்ச்சா
நின்னுடும்ண்டா மூச்சு
மனிதனும் வாழ
உணவுதான் தேவ
இயற்க்கை களோட...நீ
இணையனும் வாழ
கண்டபடி உரத்த நீயும்
மண்ணுல கொட்டாத
காத்து மாசு பட
நீயும் வைக்காத
ஆத்து ஓரத்துல
வீட்டை கட்டாத
ஏறி குளங்கள் பட்டா போடாத
வாரி பணத்தை நீ மூட்ட கட்டாத
ஒன் ஆசை என்னும் போத
ஒன்ன அழிச்சிடும் பாத
நம்ம சந்ததியும் வாழ
இயற்கை வளங்களும் தேவ ( பிளாஸ்டிக் )
சுத்துகிற பூமி ...அது
நிக்குமடா காமி
அடிக்கிற காத்து ...அது
எல்லோருக்கும் சேத்து
ஓசோன் படலத்தில்
ஓட்ட போடாத ..
பூமி வெப்பமாச்சு
பாவி ஒன்னால
சுற்று சூழலெல்லாம்
கெட்ட பின்னால
கடலுல நீருமட்டம்
ஏறும் தன்னால
கனிம வளங்களும்
மாறும் பின்னால
ஒன் ஆசை என்னும் போத
ஒன்ன அழிச்சுடும் பாத
நம்ம சந்ததியும் வாழ
இயர்கை வளங்களும் தேவ ( பிளாஸ்டிக் )