கனவுடன் ஒரு கண்ணோட்டம் - பாகம் 2
(பாகம் - 2)
கனவுகளுக்கு இலக்கணம் ஒன்று வகுப்போம்
கனவுகளின் சக்திகளை நன்கு உணர்வோம்
கனவுகளின் தொடர்பை தென்பட செய்வோம்
கனவுகள் கைகூடும் செயல்கள் புரிவோம்
கனவுக் கெல்லைகள் வகுக்க மாட்டோம்
கலைந்தி ட்டாலும் கலைய மாட்டோம்
மனதை விரிக்க வழி வகுப்போம்
மானுடத்தை யத்துடன் அங்கு இணைப்போம்
கனவினை நன்கு ஆராய்வுக் கொள்வோம்
கனவின் பொருளறிய மனத்தை விரிப்போம்
பொருளின் தரத்தின் அடித்தளத்தை யறிவோம்
வாழ்வின் தரத்தையு மத்துடனு யர்த்துவோம்
எண்ணத்தின் எதிரொலியாய் கனவை நிறுத்துவோம்
குறிக்கோளை எண்ணத்துடன் ஒன்றுபட இணைப்போம்
செயல்களை எண்ணத்துடன் செயல் படுத்துவோம்
வெற்றிகள் பலவற்றை எளிதாக கைப்பற்றுவோம்
எண்ணத்தைத் தின்னப்படுத்தும் கனவுகள் காண்போம்
செயலின் திறனாயவு பலவற்றை அறிவோம்
கண்களை அகல விரித்து காண்போம்
பகல் கனவுகளை பலித்திட செய்வோம்
ஆசைகள் பல வற்றைக் கொள்வோம்
கற்பனைத் திறனை யத்துடன் வளர்ப்போம்
ஆசையை அறிவிற் கெட்டிட செய்வோம்
எட்டா ஆசைகளை பேராசையாய் வகுப்போம்
பேராசையை மீண்டும் நன்குப் புடைப்போம்
அறிவிற்கு புறம்படின் அவற்றை யறுப்போம்
ஆசைகளை ஆசையாய் கனவுகள் காண்போம்
கனவின் பலன்களை கைகூட கொள்வோம்
கனவுகள் கலைத்திட்டாலும் கவலைக் கொள்ளோம்
மீண்டும் கனவுகள் தன்னை காண்போம்
கனவுகள் நிஜமாகும் நம்பிக்கைக் கொள்வோம்
வாழ்வின் தரத்தை மேன்மேலும் உயர்த்திடுவோம்
மாயைகளில் பல கனவுகள் காண்போம்
அறிவிற் கெட்டா கனவுகளும் காண்போம்
ஆராய்ந்தப் பின் அற்புதத்தை கைக்கொள்வோம்
களைகள் தன்னை உடனே கலைத்திடுவோம்
(வளரும்...)
- செல்வா