i support Nandhini கவிதைகள்
![](https://eluthu.com/images/loading.gif)
மூன்று மாதக் கைக்குழந்தை பசியால்
கதறி அழுகிறது.பால்புட்டி வாங்க காசில்லை.
மாங்கல்யத்தையும் பிடுங்கி சென்று பியர் பாட்டிலில்
கணவன் நனைகிறான்.தாயும் சேயும் கண்ணீரால் நனைகிறது.
ஆயிரம் பயணிகள் ஏற்றிவரும்
பேருந்து எவனோ ஒருவனின்
போதையால் நெடுஞ்சாலையில்
கட்டுப்பாடிடந்து மரண ஓலை எழுதுகின்றது.
மது என்றால் பாவம்.உள்ளுக்குள்
சென்றால் மகளும் தெரியமாட்டாள்,
எத்தனை பாலியல் வெறியாட்டம்
அத்தனையும் மதுவின் சதியாட்டம்.
பள்ளிக்கூடத்தருகில் போதை விளம்பரங்கள்
நாளைய தலைவர்கள் சாதனையை
சாதிக்கச் செல்வது நெடுந்தூரம் என்றாலும்
போதையை நாடிச்செல்வது இலகுவானது.
வைத்தியசாலை,கோயில்களுக்கு அருகில்
மதுபானசாலை..,அரசாங்கம் நினைத்ததோ
சனநெறிசல் அதிகம் என்பதால்
கச்சேரியில் பணம் மலையாய் குவியுமென்று......,
ஓரிடத்தை விட்டு மதுவை அகற்றினால்
நிம்மதி கிடைக்கும்.பாரினை விட்டு தூரம்
நகர்த்தினால் பாவங்கள் குறையும்,
ஒரு தேசம் முன்மாதிரியாய் எழுந்து
தைரியத்தோடு போராடி அட்டூழியத்தை
அழித்தால் உலகமே உன் பின்னால் அணிநடை வகுக்கும்.
கவிக்குறிப்பு:நண்பர் சரவணா அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்பையும் மதுவை தேசத்தை விட்டு அழிக்க போராடும் பாரதி கண்ட புதுமைபெண்ணான நந்தினி அவர்களுக்கு துணையாக கலையுலகின் சார்பில் நான் சமர்ப்பிக்கும் மனு.
# I Support Nandhini #