ஒற்றை மாமரத் தோட்டம்

..."" ஒற்றை மாமரத் தோட்டம் ""...

இது ஆபாச கவியல்ல
நாவினில் எச்சிலூற
உன் ரசிப்பினில் தெரியும்
ருசிப்பத்தின் சுவைகள் ,,,

மறக்காத நினைவுகளை
மனதோடு சுமந்துவர
மலரும் நினைவுகளாய்
வசந்தமே வீசுகிறாய் ,,,

பார்க்கும் பார்வையில்
கிறங்கியே கிளர்ச்சியூட்ட
சிந்தும் மழைத்துளியும்
வழுக்கியே தடுக்கிவிழ ,,,

மலர்ந்திட்ட இதழின்
சுணை சிந்தும் தேனதை
சிந்தாமலே ருசித்துவிட
நாவதும் துடித்திட ,,,

கொத்தாய் தொங்கிடும்
இலை மூடிய கனிகளை
இமைக்காமல் நோக்கையில்
நானுமொரு குழந்தைதான் ,,,

இளமை முதிர்ந்தந்த
இடைகீறிய காயதனை
உப்பிட்டு படியலாக்கி
வெப்பமூட்டி வெக்கிட்திட ,,,

தொட்டுப்பார்க்க சொல்ல
வேண்டாம் என்றாலும்
வேண்டிடும் மனமதில்
கலந்தே கவிதை பாடும் ,,,

இது ஆபாச கவியல்ல
நாவினில் எச்சிலூற
உன் ரசிப்பினில் தெரியும்
ருசிப்பத்தின் சுவைகள் ,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (10-Dec-15, 10:52 am)
பார்வை : 126

மேலே