புன்னகையின் இரகசியம்
 
            	    
                ..."" புன்னகையின் இரகசியம் ""...
வசந்தத்தின் வாசலென்று
தலைமீது தூக்கிவைத்து 
எல்லையிலா இன்பத்தில் 
இருக்கின்ற வேளையிலே ,,,
அன்பினின் அடையாளம் 
இனம்காண முடியாமல் 
கண்களை குத்தியே நீ 
கண்ணீரை சோதித்தாய் ,,,
நேசத்தின் நெஞ்சத்தை நீ 
வஞ்சகமே கொன்றுவிட்டு 
வாடிக்கை விளையாட்டாய் 
வாய்க்கருசி போட்டாயே ,,,
ஏளனமான சிரிப்புக்கும்
எதிர்மறை பேச்சுக்கும்
ஏகாந்தத்தின் தாக்கத்தை 
ஏன் தந்தே சென்றாயோ ,,,
சொல்லாத சொல்லுக்கு 
இந்நாளும் வேதனையே
வேண்டாம் இச்சோதனை 
எதிருக்கும் பிராத்தனையே ,,,
வருத்தத்தை வெளிக்காட்ட 
வடிகாலின் இடம் நாடி 
வார்த்தைகளை தேடியே 
வக்கத்துப் பேனேன்னான் ,,,
கூட்டங்கள் கூட்டமாய் 
வேடிக்கை பார்ப்பவரும் 
புன்முறுவல் பூத்துவிட்டு 
தெரியாதே போகின்றார் ,,,
ஊமையின் சோகம்போல் 
சொல்லாதே மெளனமாய் 
சிரிக்கிறேன் நானும்தான் 
கிறுக்கனாய் ஆகாமல் ,,,,
என்றும் புன்னகையுடன் ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...
	    
                
