விளங்காத புதிரா நீ வெய்யோனின் கதிரா

தேன்மொழியோ கனிமொழியோ உன் பெயர்
தீம் சுவையோ தெள்ளமுதோ உன் மொழி !
மெல்லிசை கண்டு மெலிந்த நெஞ்சத்தை
வன்சொல் கொண்டு வதைப்பாயோ
வான் தொடும் அழகில்
மாய்ந்தவர் கணக்கில்
என்னையும் இன்று சேர்ப்பாயோ !
ராமபாணமாய் (வில்) வளையும் உன் புருவம் - அதில்
சோமபானமாய் சொக்கும் என் உருவம்!
கார்குழலும் கருவிழியும் இருட்டுக்குச் சொந்தமடி -உன்
பார்வை மட்டும் எனை வெட்டும் மின்னலடி!
நிமிர்ந்த நடையும் நேர்த்தியான பார்வையும்
பாரதியில் பாதியா நீ!
மானத்தின் புதல்வியே - நீ
நாணத்தில் மட்டும் ஊனமோ!
வானத்து தேவதையோ - நீ
தரையிறங்கிய வான்மதியோ!
மண்ணிலுள்ள அழகையெல்லாம்
வென்றுவிட்ட மன்னவற்கும்
விளங்காத புதிரா - நீ
வெய்யோனின் கதிரா?!

எழுதியவர் : ஷர்மிளா (8-Oct-16, 11:06 am)
பார்வை : 1063

மேலே