நினைத்ததும் கிடைத்ததும்
அளவுமீறிய எதிர்பார்ப்பு மனதில் வரைந்தது
ஆவல் நினைவுகளோ நினைவில் நிறைந்தது
கிடைக்க போவதும் அதனாலான பெருமையும்
காலை தரையிலிருந்து அங்குலம் உயர்த்தியது
கையில் கிடைக்க ஜரிகை தாளை பிரித்தேன்
அதிர்ச்சி அய்யகோ ஏமாற்றம் உணர்ந்தேன்
பாதம் பூமியில் பரவியதும் முழு எண்ணமும்
எப்படி முழு பூசணியை சோற்றில் மறைப்பது
சரி இப்ப என்ன ஆகிபோச்சு என்று சிலரிடம்
இதெல்லாம் எம்மாத்திரம் போல பிறரிடம்
எனக்குள் குடியிருக்கும் போலி பந்தா மட்டும்
இம்மியும் குறையாமல் இன்னும் வளரணும்