முரண்படை------அஹமது அலி----
வேரில் பூக்கும் பூமரங்கள்
அனலை வீசும் சாமரங்கள்
மேல் எழும்பும் அருவி
தலைகீழ் பறக்கும் குருவி
நீர் இல்லாத நதிகள்
நீச்சல் தெரியா மீன்கள்
இமைகள் மூடா உறக்கம்
நினைவை இழக்கா மயக்கம்
அமாவாசை முழு நிலவு
பூட்டு திருடிய களவு
மரத்தை தாங்கும் மலர்கள்
மலர்கள் நுகரும் மணங்கள்
காற்று வாங்கும் மூச்சுகள்
காது பேசும் பேச்சுகள்
பயணம் போகும் பாதைகள்
சயனம் கேட்கும் காதைகள்
திசை மறந்த துருவங்கள்
மீசையான புருவங்கள்
கூவுகின்ற அழகு மயில்கள்
அகவுகின்ற கானக் குயில்கள்
எறும்பு சுமந்த யானைகள்
அரும்பில் சுவைத்த கனிகள்
பூமியை பார்த்து சோறுண்ட நிலா
நாட்கள் கொண்டாடிய திருவிழா
திரும்ப கிடைத்த காலங்கள்
ஆயுதத்தை அழவைத்த காயங்கள்
வெள்ளையடித்த வானவில்
ஏழு வண்ணத்தில் வானிலா
சிகரம் இல்லாத மலை
ழகரம் இல்லாத தமிழ்