சிறைச்சாலை

..."" சிறைச்சாலை ""...

சிறை கம்பிகளுக்கு பின்னால்
உலகிற்க்கும் மறைக்கப்படும்
சொல்லப்படாத உண்மைகள்
இங்கு செல்லறித்தே செத்தன
துருப்பிடித்த இரும்புகளாய்,,,

வேற்றுமையில் ஒற்றுமையாய்
நாடு சுதந்திரத்திற்க்கு பலரும்
வேறுபாட்டை வேட்டை நாயாக்கி
தன் சுகபோகதிற்க்காய் சிலரும்
அதே சிறையில் சிரித்த முகமாய்,,,

ஆத்திரத்தில் அறிவிழந்தவற்கும்
சிதைக்கின்ற தண்டனைக்கூடம்
தன்னறிவோடே செய்பவற்க்கோ
வந்துபோகும் வசந்தத்தின் வீடு
சிறையெனுமிந்த இரும்புக்கூடு,,,

குற்றம்தனை உணர்ந்தவர்க்கு
போதனையான போதிமரம்
குற்றமத்தில் லயித்தவர்க்கு
போதைதரும் சோலைவனம்
அ"நீதி" என்னும் சிறைச்சாலை,,,

சந்தேகமென்ற பெயரினாலும்
சாத்தியமென்னும் பெயராலும்
சாமிய மக்களையே சாரையாய்
வரவழைத்து வாழ்வினை சீண்டி
அழவைத்தே அழகுபார்க்கும்,,,

சிறுபெரும் தண்டனைக்காளாகி
குற்றவாளியாய் செல்வதைவிட
செய்கூலியில்லா சேதாரபட்டறை
குற்றவாளியை செய்யும்மிடமாய்
சிறைச்சாலை சிறப்படைகிறது,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (19-Jan-15, 10:34 am)
பார்வை : 813

மேலே