பைத்தியக்காரனின் வசந்தமாளிகை - சந்தோஷ்

ஒரு வசந்த மாளிகை
அன்பு ராஜாங்கத்தின்
நேச மமதையில்
கட்டி வைத்து காத்திருக்கிறது
ஒரு பைத்தியம்...!

அந்தோ பரிதாபம்....!
இவனின் மாளிகைக்கு
குடியேற தகுதியில்லா
மங்கைகளின் தேசமாகிவிட்டது.
இந்தியா....!


அன்று இவனை
கடந்து சென்றவர்கள் யாவரும்
காதல் என்ற பெயரில்
நிர்வாண வீதியில் சென்றார்களாம்
இவன் மட்டும்
அன்பு புனித ஆடையோடு
சென்றானாம்... ஆகவே..
இவன் பைத்தியன் என்றார்களாம்...!

இவனின்
வ்சந்த மாளிகை இப்போதும்
கட்டப்பட்டுக்கொண்டே எழுகிறது
கற்பனைப்படுத்திக்கொண்டே உயருகிறது.

என்றாவது ஒருநாள்,
மாளிகை வானத்தை தொடலாம்
வானம், மாளிகையின் கூரையாகலாம்.
அதற்குள்,
பைத்தியக்காரனின் வசந்தமாளிகைக்கு
தகுதிப்படைத்த தேவதை
யாரேனும் இவனுக்கு உரிமையானால்
அன்று எழுதுவான்
ஒரு காதல் கவிதை...
காதல் புனிதமானது என்ற தலைப்பிலும்..!
காதலுக்கு வயதில்லை என்ற கருப்பொருளிலும்...!


அதுவரை.....
யாவும் கற்பனையே.. யாவரும் கேளாதீர்...

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார். (19-Jan-15, 11:18 am)
பார்வை : 184

மேலே