இன்றைய மருத்துவர்
இன்றைய மருத்துவர்
(With due apologies to good doctors)
வயல் சூழ்ந்த கிராமத்தில்
வீதியில் நான் தவழ்ந்து
மண் மேட்டில் நான் புரண்டு
சிற்சில பாதிப்பினில்
பெற்றோர் பன்முறை
வைத்தியரிடம் காட்டியபின்
என்னை அவர் தொடாமலே
உற்று என் முறை நோக்கி
பச்சிலை சில பிழிந்தெடுத்து
வாய் எனதில் அவர் புகட்ட
எத்தகைய நோயதனும்
பறந்தோடி சென்றதுவே;
அன்றிருந்த அத்தகைய
மருத்துவரை காணுமே இன்றிங்கே!
சிறுவனாக நான் இருந்து
நகரத்தில் நான் வளர்ந்து
நோயுண்ட போதினிலும்
இல்லம் வந்து, நாடி பிடித்து,
கண் இமையின் கீழ் நோக்கி,
நோயின் குறி அறிந்து,
சரிவர மருந்து தர,
தொண்டு என்ற மரபதனில்
கொடுத்த காசையும் மறுத்த
அன்றிருந்த அத்தகைய
மருத்துவரை காணுமே இன்றிங்கே!
விஞ்ஞானம் அதிவளர
திண்டாட்டம் அதிகரித்து
நோய் என்று கூறுதலில்
எக்ஸ்ரே, எமாரை, ஸ்கேன் மற்றும்
பரிசோதனை பலவற்றும்
சிறந்திந்த நிலையமே
பரிசோதனைக்கு உகந்ததென
வணிக முறையில் வலியுறித்தி,
வயிற்றில் சிறு வலிஎனினும்
கத்தியால் கீறி நோக்கி
செல்வம் பல அழித்திட்டபின்
இன்செய்தி பெறுவீர் நீர்
சரிவர புரியவில்லை
நோய் ஒன்றும் உமக்கு இல்லை
என்கிற மருத்துவர்
நிறைந்தனர் இவ்வுலகில்!
மருத்துவம் என்ற மாபெரும்
மதிப்புடைய தொண்டதனை
மாசு படுத்தும் இத்தகைய
மாண்பற்ற மருத்துவரை
மறுத்து நாம் புறக்கணிப்போம்!

