லட்சங்களுக்காக

எதிர் வீட்டு ஜன்னலில்
மின்னலாய் அவளைக் கண்டதும்
அவனுக்குள் ஓர் அற்புதம் ..
அவளுக்கோ பெருமிதம் !
அவனும், அவளும்
பேசி கொண்டனர் கண்களால்...
இதயங்கள் இணைந்தன
இ-மெய்ல்கள் பறந்தன..
அவள் வீட்டுக்கும் தெரிந்தது
அவனுக்கு அடியும் விழுந்தது
மறுநாள்...
மணமேடையில் மணகோலத்தில் அவள் !
மருத்துவமனையில் மரணகோலத்தில் அவன்!
மகிழ்ச்சி வெள்ளத்தில்
காதலை பிரித்த கல் நெஞ்சங்கள் !
லட்சிய காதல் தோற்று போனது
சில லட்சங்களுக்காக ..!

எழுதியவர் : உடுமலை ஸே. ரா.முஹமது (6-Feb-15, 5:39 am)
பார்வை : 160

மேலே