வரம்
வரம் தருவாய் இறைவா....
அள்ளி தர வேண்டி
கிள்ளி தர அளித்தும்
இருந்தும் இல்லா நிலையும்
இரையை எதிரே வைத்து
பசித்தவன் புசிக்க விடாமல்
பேருக்கு உணவளித்தல் - போல
விரும்பியதை அளித்த இறைவா!
என்னைப் போல் இனியொருவன்
இவ்வுலகில் வேண்டா !
விரைவில் மரணம் பரிசாய் தரவும்!
அதையும் முன் அறிந்து
நாட்கள் என்னி - உயிரை
விரும்பிப் போக்கும்
ஞானம் பெறவும்..
வரம் தா இறைவா!