காயம்பட்ட கவி

குச்சொழுங்கையில்
மாடிவீட்டு
மதில் மேல்
திராட்சை ரச‌
போத்தல்களை
நொருக்கி
பதித்துள்ளார்கள்!!

இந்த கவிதை
அதிலிருந்து
குதித்து எழுந்து
வருகிறது!
கைக்குட்டைகளால்
தடுங்கள் இதன்
இரத்த வாடையை..

கண்ணாடி
சிராய்களை
அகற்ற‌வேண்டும்
கைத்தாங்கலாக‌
கூட்டிச்சென்று
அதோ அந்த
விழுதுகளின் கீழ்
அமர்ந்திவிடுங்கள்!!!

இந்த கவிதையும்
முழுமை
பெறவில்லை
நடுப்பக்கத்திலும்
இரத்தம் வழிகிறது!!
இருப்பதெல்லாம்
நான்கைந்து வரிகளே!!

அதுபோதாது
மாடிவீட்டு
மகாராஜாவின்
கட்டிலறையில்
நடந்தவைகளை
அம்பலப்படுத்த!!

இதுபோலதான்
நான் தலைப்பிட்டு
அனுப்பி வைக்கும்
கவிதைகளெல்லாம்
கலவரத்தோடு
காயம்பட்டு
வருகின்றன!!

இனிமேல்
எந்த கவிதயையும்
போகப்போவதில்லை
நானாகவே
போக இருக்கிறேன்
பெண்வேடம் தரித்து!!

எனது
கவிதைகளை
பார்த்துக்கொள்ளுங்கள்
அன்பர்களே!!
போய் வருகிறேன்...

எழுதியவர் : புலவூரான் ரிஷி (12-Feb-15, 12:25 am)
Tanglish : kaayambatta kavi
பார்வை : 90

மேலே