புதுமை பெருமையா
புதுமைகள் நிறைந்த உலகம்
புகழுக்கு ஏது பஞ்சம்
புதுமையின் பாதை தேடி
பழமையை மறந்தவர் பலகோடி
பணமே வாழ்வின் பிரதானம்-அதற்கு
இழந்தோம் வாழ்வின் நிதானம்
மனித நேயத்தை மறந்துவிட்டு-இங்கு
மதிப்பெண் பட்டியல் தேடுகின்றோம்
உறவின் அர்த்தம் தெரியாமல்-அவைகளை
உதறித் தள்ளி வாழ்கின்றோம்
புது நாகரீகமென்று பீற்றிக்கொண்டு- நம்
தாய் மொழியினை மறக்கின்றோம்
திரைப்பட வசனம் பேசி-இதுதான்
வாழ்வின் பெருமை என்கின்றோம்
மனித நீ மாறிவிட்டாய்
மாற்றங்கள் பல தந்துவிட்டய்
புதுமை என்று புலம்பித்தள்ளி
இனிமை தன்னை இழந்துவிட்டாய்
- திருமேனி.தி.ஈ