கனவுகள்

கற்பனைக்கு எட்டாதவற்றையும் ,
உண்மையென பிரதிபலிக்கும்,
ஒரு அதிசய ஆவணப்படம் கனவு .
நம் செயல்களை,
சராசரியாக நிர்ணயிக்கும் சக்தி,
நாம் காணும் நம் கனவுக்குண்டு.
அவை,
இறந்தகாலத்தில் நடந்தவையாக இருக்கலாம்.
இல்லை,
நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருப்பதாக இருக்கலாம்.
அல்லது,
எதிர்காலத்தில் நடக்க போவதாக இருக்கலாம்.
இறந்த காலமென்றால்,
அதனை ரசித்து பாருங்கள்.
நிகழ் காலமென்றால் ,
அதனை அனுபவித்து பாருங்கள்.
எதிர் காலமென்றால்,
அதனை ரசித்து அனுபவிக்க கற்று கொள்ளுங்கள்.
முக்காலங்களையும்,
ஒரே நேர்க்கோட்டில் மையப்படுத்தும் சக்தி,
நமது மனம்,இதயம்,மூளை
சேர்ந்து நடத்தும் கனவுக்கு உண்டு..........

எழுதியவர் : மோகன்குமார் (16-Feb-15, 6:15 pm)
Tanglish : kanavugal
பார்வை : 52

மேலே