மகளே

பிரசவத்திற்காக பிறந்த வீட்டிற்கு வந்தாள் மாலதி (குழந்தை பிறந்தது)....
மறுநாள் காலை

(கணவனுக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்கிறாள் ...)
மாலதி :::::::::: " என்னங்க என்ன பண்றிங்க ..இங்க என்னால இருக்க முடில ...வசதியா இல்லைங்க ...பிடிக்கவே இல்ல ...தயவுசெஞ்சு சீக்கிரமா வந்து கூட்டிட்டு போங்க ....வீடும் வசதியா இல்லைங்க ...சாப்பாடு சரி இல்ல .."

மறுமுனையில் கணவன்::::::::::: " அடியேய் வேகமா பேசாதடி அத்தை காதுல விழுந்தா கஷ்டபடுவாங்க.. அவங்களால தாங்கிக்க முடியாது ...ஒரு ரெண்டு நாளைக்கு பொறுத்துக்கோடி ..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ..முடிஞ்சதும் கண்டிப்பா வந்து கூட்டிட்டு போறேன் ..."

மனைவி ::::::::::::::::::::"அதெல்லாம் முடியாது இப்போ நீங்க வரலனா நானே வந்துடுவேன் அதுக்குமேல உங்க இஷ்டம் நன் வச்சிடுறேன்"

தொடர்பை துண்டித்தாள் மாலதி ....

மாலதியின் தாய் அனைத்தையும் கேட்டுகொண்டிருந்தாள்....(கண் கலங்கினாள்)

அடுத்த 1 மணி நேரத்தில் ...

வீட்டிற்கு வெளியே காரின் மணி அடித்தது ...

மாலதி::::::; இதோ வந்துடேங்க....

(கணவன் மனதுக்குள் அத்தைட்ட என்ன சொல்றதுனே தெரிலையே ...)////

கணவன் ::::::::::அத்தை நாங்க போயிட்டு வரோம் ...மாலதிய பாக்கமா என்னால இருக்க முடியல நான் பத்திரமா பாத்துக்குறேன் நீங்க கவலைபடாதிங்க.....

நடந்ததை அறிந்தும் எதுவும் பேச முடியாமல் தயங்கி கொண்டே சரி மாப்பிளைன்னு மாலதியின் தாய் சொன்னாள்.....

கார் கிளம்பியது .....


மாலதி மனதிற்குள் .....(அம்மா என்ன மன்னிச்சிடு ...உன்னைய என்னால கஷ்டபடுத்த முடியல ...வேலைக்கும் போய்கிட்டு என்னையும் பாத்துக்க நீ ரொம்ப கஷ்டபடுற ... அதான் வேற வழி இல்லாம இப்படி பண்ணிட்டேன் ...))))

எழுதியவர் : கலை சுபா (20-Feb-15, 10:52 am)
Tanglish : magale
பார்வை : 361

மேலே