பயம் - தொடர்கதை - ஒன்று - கிருஷ்ணா
---------------நீண்டு வளர்ந்திருந்த அந்த ஆலமரத்திலிருந்து நெடுநாட்களாய் விடுதலைக்காக ஏங்கி, இன்று காற்றினால் அவ்வெண்ணம் நிறைவேறியது போல ஆலமர இலையொன்று காற்றில் மிதந்து வந்து ஒய்யாரமாய் தண்ணீரின் மேல் விழுந்தது. நீரில் விழுந்தும் அதன் ஆட்டம் குறையாது நீருக்கு ஏற்றவாறு அனும இங்கும் ஆடியும் தாநீருக்குள் மூழ்கியும் தனது சந்தோசத்தை கொண்டாடியது.
-------------அந்த இலையின் ஆட்டத்திற்கு ஏற்ப தனது தலையை ஆட்டிக்கொண்டே தன்னிலை மறந்து
அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் அமுதன். அந்த இல்லை இரண்டு முறை தண்ணீரில் மூழ்கி மேலெழும்பியது.மூற்றம் முறை மூழ்கும் போது ஏதோ ஒரு விசை அவனை பின்னாலிருந்து
தள்ளியது.கற்பனையில் மூழ்கி இருந்த அவனுக்கு பதட்டப்பட யோசிப்பதற்குள் அவன் முதுகு தண்ணீருக்குள் மூழ்கி விட்டது. யாரோ தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பதும் மட்டும் அவனுக்கு புரிந்தது. தண்ணீரில் குளிரேதும் தெரியவில்லை. பலமுறை அங்கு குதித்து பழகியவன் போல அவனுடல் உள்சென்றது. பாதம் தரையை தொட்டு உந்தியதும் அவனுடல் மேல வர ஆரம்பித்தது. கைகளை நன்கு விரித்து தண்ணீருக்குள் அமிழ்தினான். உடல் சட்டென்று மேல வந்தது. முகம் சூரிய ஒளியினை உணர்ந்தது ஆனால் விழியும், உடலும் அவனை எச்சரித்தன. உயிரோ உன்னை விட்டு போய்விடுவேன் என்று பயமுறுத்தியது.எங்கு இருக்கிறோம் என உணர்வதற்குள் தன் பின்னாலிலிருந்து யாரோ தன்னை அவர்வசம் இழுப்பதை உணர்ந்தான்.