அன்பென்னும் மழை-17-தேவி

(வர்ஷிதாவுக்கும் வருனுக்கும் நிச்சயம் செய்வதற்காக சொந்த கிராமத்திற்கு குடும்பத்தோடு சென்றிருந்தனர். அப்போது அவர்களுக்கு ஜாதகம் பார்த்த குடும்ப ஜோசியரிடம் அவர் மனைவி )

ஏன் ரொம்ப அமைதியா உட்கார்ந்துட்டிங்க .
ஒன்னும்மில்ல மீனாச்சி .
இல்ல நீங்க எப்பவும் இப்படி இருக்க மாட்டிங்களே . அதான் கேட்டேன் .
அந்த செல்வநாயகி அம்மா வந்துட்டு போனாங்க இல்லையா ?
.
ஆமாங்க . அதுதான் ஜாதகம் நல்லா இருக்கு . தராளமா கல்யாணம் பண்ணலாம் . அவங்க எதிர்காலம் நல்லா இருக்கும்னு சொன்னீங்கள்ள . அப்புறம் என்னங்க .

நான் சொன்னதில பாதி உண்மை மீனாச்சி .
மீதி .
அவங்க ரெண்டு பேரும் கல்யாண பந்தத்துல இணைஞ்சு சந்தோசமா வாழ்வாங்க . ஆனா அது இப்ப குறிசிருக்கான்களே அந்த தேதியில நடக்காது . இன்னும் நாலு வருஷம் ஆகும் . அதுக்கு நடுவில இன்னும் எவ்வளவோ சோதனைகளை அவங்க ரெண்டு பேரும் தாங்கவேண்டியிருக்கும் .
அதுக்கு அந்த கற்பகாம்பாள் தான் அவங்களுக்கு துணையா இருக்கணும் மீனாச்சி .

இரவு உணவிற்கு பின் ஓய்வெடுக்க தன் அறை புகுந்தாள் வர்ஷிதா. ஜன்னல் வழியே தெரிந்த பால் நிலா அவளை மயக்கியது .
நேற்று இரவு இது போல் இங்கு நின்று ரசிக்கையில் வருண் வந்து பேசியது அவள் நினைவில் வந்து கிச்சு கிச்சு மூட்டியது.

என்னடா கண்ணு . துங்கலையா , உமா கேட்க .
வந்துடிங்களா அம்மா . தூங்கனும் . உங்களுக்கு தூக்கம் வரலையா அம்மா .

சந்தோசத்துல தூக்கம் கண்ணுக்கு தூரமாயிருச்சு கண்ணம்மா .
நான் பிறந்த ஊருக்கு வந்தது . சொந்த பந்தங்களை பார்த்தது . உனக்கு உன் மனசுக்கு பிடிச்சவரையே உன் வாழ்க்கை துணையாக பார்த்தது இதெயெல்லாம் நினைக்கறப்போ ரொம்ப சந்தோசமா இருக்குடா கண்ணு . ஆனா உன் அப்பா இதை பார்கறதுக்கு இல்லாம நம்மள விட்டுட்டு போய்ட்டார் என்று அழ,
அம்மா அப்பாவை நினைச்சு அழகூடாதுன்னு எனக்கு தைரியம் சொன்ன நீங்க இப்படி அழலாமா. அம்மா அமைதியா இருங்க . வாங்க தூங்கலாம் என்று கையை பிடித்து அழைத்து சென்று படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டாள்.

பக்கத்தில் படுத்தவள் சந்தோஷத்தில் இமைகள் மெல்ல மூட , கண்களுக்குள் வருண் வந்து சிரித்தான் .

காலையில் எழுந்தவள் காலை கடன்களை முடித்து விட்டு , வந்து பார்த்தாள் .
அம்மா என்ன இன்னைக்கு இன்னும் தூக்கம் . எழுந்திரிக்க மனமில்லையா . அம்மா , அம்மா என்று குனிந்து எழுப்பினாள் .

மெல்லிய புன்னகை இதழில் உறைந்துருக்க மீளா துயிலில் ஆழ்ந்துவிட்டிருந்தால் அவள் அம்மா .அதை அறியாமல் எழுப்பிக்கொண்டிருந்தாள் வர்ஷிதா.


(தொடரும்)

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (19-Feb-15, 4:06 pm)
பார்வை : 285

மேலே