மதி இழந்த மனித ஓநாய்கள்

காலை முதல் மாலை வரை
உழவனுக்கு ஊண்று கோளாகவும்..!

கால் வயிறு கஞ்சி குடிக்கும்
ஏழைகளுக்கு எசமானாகவும்..!

நம் சுமை இழுத்து நடக்கையிலே
தோல் கொடுக்கும் தோழனாகவும்..!

உன் பால் குடித்து பசியாறும்
மனித குளத்திற்கு தாயாகவும்..!

பாலூற்ற கொண்டு செல்லும் நம்
இறுதி ஊர்வலத்தில் பறையாகவும்..!

உனை மாமிசமாய் சாப்பிடும் சில
மனித மிருகங்களுக்கு இறையாகவும்..!

மனக்குறையினை கூர வந்தால்,
மண்டியிட்டு செவி கொடுக்கும்
நந்தியாகவும்..!

பல அவதாரங்கள் நீ எடுத்து,
இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம்
பயன் கொடுக்கும் உன்னை..!

இனியாவது அடிமாட்டிற்கு
விலை பேசாமல் இருக்குமா
இந்த மதி இழந்த
மனித ஓநாய்களின் கூட்டம்..!

எழுதியவர் : இந்திரன் (23-Feb-15, 6:55 pm)
பார்வை : 106

மேலே