ஆலங்கட்டி மழையோடு

கற்கண்டு துகள்களாய் என்ன
கருவானம் வீழ்கிறதோ?
அல்ல
சிரித்து நின்ற வானின் பற்கள்
சிதறித்தான் வீழ்கிறதோ ?
எதிர்த்து கேட்ட குடைகள் ஏனோ
கோணி பணிகிறதோ ?
மழை வரும்போது மயில்கள்
சிறகுவிரிக்குமாம்
மனிதம் இறக்கை விரிவதை
உணர்த்துகிறதே இம் மழை
குழந்தையாய் மாறி
குதிக்க விளைந்தது மனது
மனிதம் நரை வரலாம்
மனதில் திரை விழுமா?
திமிறியது மனது சில கணம்
உருண்டு விழுந்த மழைத்துளிகள்
உருகி நடந்தது பள்ளத்திலே
குதித்து வந்த குழந்தை முகத்தை
மீசை தடுத்தது உள்ளத்திலே
சாமி ஆடிய பெண்ணொருத்தி-தன்
சேலை சரி செய்வது போல்
உலகம் தெளிந்து நடந்தேன்
நான் நானாக என்று .
உள்ளம் கேட்டது மௌனமாய்
யாருக்கு வெளிவேசம் என்று ?
லெனின்