அரை மனதோடு
நேற்று எல்லோரும் பெண்கள் தின வாழ்த்தை சொல்லும் போது எல்லாம் ஏனோ, முழுமனதோடு
ஏற்க முடியவே இல்லை.. !!
ஏனெனில் எல்லோராலும் இன்று ஏற்று கொள்ள கூடிய ஒரு விசியம் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம்
இல்லை என்பது தான்.. !!
ஏதோ ஒரு நாள், வேலை பளுவால் நேர தாமதமாகி வீடு செல்லும் வழியில், ஒரு புதியவனின் பார்வையில்
மனதில் எழும் ஓநாய் சத்தம் கேட்காமல் இருக்கும் நாளில் இந்த வாழ்த்தை முழு மனதார ஏற்கலாம்.. !!
பத்திரிக்கையின் எந்த ஒரு பக்கத்திலும், "பெண் கடத்தி கொலை" , "கற்பழிப்பு" , "பெண்ணை காணவில்லை" , "ஆசிட் வீச்சு"
என்ற வார்த்தைகள் மரணித்து போகும் நாட்களில் இந்த வாழ்த்தை முழு மனதார ஏற்கலாம்.. !!
பத்து மணி அளவில் ஒரு பெண்ணை பயமின்றி வெளி செல்ல அனுமதிக்கும் நாட்களில்,
கையில் பச்சிளம் குழந்தையை பிடித்து கொண்டு பிச்சை கேட்கும் பெண்கள் கூட்டம் கலைந்து போகும் நாட்களில் வாழ்த்தை முழு மனதார ஏற்கலாம்.. !!
பெண்களை கொச்சை படுத்தும் பாட்டு வரிகளும், !! பெண்களை உரித்து காட்டும் விளம்பர பலகைகளும் காணாமல் போகும்
நாட்களில் வாழ்த்தை முழு மனதார ஏற்கலாம்.. !!
"என்னடா பெரிய பெண்கள் தினம் ?" என்ன _____ இந்த விழா எல்லாம் ?? என்ற கேள்விகள் காதில் விழாத அன்று இந்த
வாழ்த்தை முழு மனதோடு ஏற்கலாம்.. !!
இன்று நாம் ருசிக்கும் சுதந்திரம் ஒரு நாள் ஒரு சிலரின் பகல் கனவே அது...!!!
அது போல் நாமும் ஒரு நாள் ரசிப்போம் இரவு நேர மழையை..!!
தெருக்களின் மத்தியில் கம்பீரமாய் நின்று கொண்டு.. !!! :-)
எது எப்படி ஆனாலும், என்னை பொறுத்த வரை நான் பெண்ணாய் பிறந்தற்கு மகிழ்ச்சியே.. !!
ஒரு பெண் சில நாட்களில் அவள் ஏற்கும் வலி, அவள் ஏற்கும் தாய்மை.., அதனால் உண்டாகும் வலி என ,
எப்போதும் சகிப்பு தன்மையின் தாய் அவளே.. !!!
என்னை பொறுத்த வரை, ஒரு பெண்ணை பூவாகவோ , புயலாகவோ யாரும் பார்க்க தேவை இல்லை..!!
பெண்ணை பெண்ணாக பார்த்தால் அதுவே போதும்.. !!!
மனைவிக்கு உலக அழகி என கர்வம் ஊட்டிய எல்லா கணவன்களுக்கும், இளவரசி மகுடம் சூடிய எல்லா தந்தையருக்கும்,
மொத்தத்தில் பெண்ணை பெண்ணாய் பார்க்க தெரிந்த எல்லா ஆண்களுக்கும் நன்றிகள்.. !!!
பெண் என்ற மகுடம் சூட்டிய எல்லா ராணிகளுக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.. !!
- அரை மனதோடு
இவள்