கடைசி கடிதத்தில் கேள்விக்குறி

கண்ணீரை மையாக்கி
கவியொன்று நான் வடித்தேன்
கட்டிளம் கன்னியவள்
கதையை தான் நான் உரைத்தேன் .

அழகான தீவொன்றில்
அடிமையாய் அவள் பிறந்தாள்
ஆட்சியின் கொடுமையில்
அவலத்தோடு வளர்ந்து வந்தாள்

பயங்கரவாதி என பறிகொடுத்தாள்
பெற்றவரை
பாசம் வேண்டுமென தேர்ந்தெடுத்தாள் காமுகனை .

கண்ணே மணியே என்று
பொய் கோடி அவனுரைத்தான்
பேதை அவளின் உடல் ருசிக்க
பலவேஷம் போட்டுநின்றான் .

எண்ணமது நிறைவேற
கன்னியவள் தனை தொலைத்தாள் காதல் இல்லை அவனிடத்தில்
காமம் மட்டும் உள்ளதென
கண்டுகொண்டாள் காலம் கடந்து

கதறி அழ முடியவில்லை
கண் துடைப்போர் எவரும் இல்லை
முடிவொன்று தான் எடுத்து
உயிர் மூச்சை நிறுத்திக் கொண்டாள்

கண் இழந்து வாழ்ந்திடலாம்
கற்பிழந்து வாழ்வேனோ .?
கடைசிக் கடிதமதில்
கன்னியின் கேள்விக்குறி .!!!!

எழுதியவர் : கயல்விழி (10-Mar-15, 8:24 pm)
பார்வை : 140

மேலே