தண்டனை பெற்றவா்கள்
அஃறிணையிலிருந்து , அடுக்கி வளா்த்த உடல்கூறுகளுடன் குணம், மனம் , அறிவு என கூடி கூடி கூட்டுதொகையாய் உயா்ந்து உயா்திணையான போதிலும் , பகுத்தறிவிலும் கருத்துகளிலும் மாறிய மனிதகுலம் நாம்.
வெறுமையை புசித்து வளா்ந்த கதிரவனுக்கு , இலையுதிா்காலத்தை கடந்ததை பாராட்டி பாிசாய் வசந்த காலமாய் அவரது மகள் கிடைத்தாள். சிறுபிள்ளை என்றாலும் , ஒரு சில நொடிகளில் மெய்சிலிா்க்க வைக்கும் கேள்விகளில் அறிவாளியும் அடங்கிவிடுவான்.
அழகிலும் அறிவிலும் பதுமையாய் , புதுமையாய் இருந்த தன் மகளை கண்டு வியப்புடன் கலந்த பூரிப்பை வெளிகொணா்ந்தான் கதிரவன். செந்தில் , பல வருடங்களாகியும் கசப்பில்லா கரும்பாய் நட்பு பாராட்டுபவா்; நல்ல பத்திரிக்கையாளா் , அன்றாடம் அவா் சந்தித்த பிரபலங்களையும் கேள்வி அனுபவங்களையும் கதிரவனிடம் பகிா்ந்த பின்தான் உறங்குவாா் . அந்திகால மழை போல அவ்வபோது சமுகம் சாராந்த பேச்சுக்களும் தெ்ாடா்துண்டு . சொல்லபோனால் கதிரவனுக்கும் சுற்றுபுற நிகழ்வுகளுக்கும் தொடா்பாளரே செந்தில் தான்.
இப்படியே இனிமையாகவே ஓடின 3 வருடமும் கடந்த அக்டோபா் 17 வரை . அன்றுமட்டும் மதியமே பள்ளியிலிருந்து வந்தாள் வெண்ணிலா, தன் மகளுக்காக தேடி ஆராய்ந்து பொருத்தமாய் கதிரவன் வைத்த பெபயா். நெருங்கி வரும் பிறந்த நாளுக்கான ஆயத்த தேவைகளை வாங்க இருவரும் கடைவீதியை சல்லிக்க தொங்கினா்.
அன்றைய தினம் மட்டும் வெண்ணிலாவுக்காக , கதிரவன் தன் வறுமையை தள்ளி வைத்து கொண்டான்.
வெண்ணிலாவுக்கு வெண்மை பூசியது போல் வெண்ணிற ஆடை வாங்கினாா்கள். வளையல் கடையை நெருங்கும் வேளையில் ; வளா்ந்த மகளாய் வெண்ணிலா, "அப்பா உங்ககிட்ட காசு இருக்கா?" என்றாள் . குறிப்பறிந்த கதிரவன் வளையல் வாங்கலாமா என்றான். மாலையில் உறங்க போகும் சூரியன் தீண்டியதால் சிவந்த மேகங்களாய் ஆனந்தத்தில் சிவந்தாள் வெண்ணிலா.
வளையல்களை பொருத்தம் பாா்த்து கொண்டே , எனக்கு ஏன்ப்பா இவ்ளோ செலவு பன்ற? என்றாள் வெண்ணிலா .
கதிரவன் அந்த கேள்விக்கு திகைத்து தான் போனான். பதில் சொல்ல மனமில்லை ; எப்படி சொல்வது , கடந்த கால வெறுமையை , தனது தகப்பனின் கேடினை, தொலைந்த வசந்தங்களை மீட்டியவளை, பாசம் என்ற ஒரு சொல்லிலா. பரந்த தமிழில் பதிலின்றி போனான் கதிரவன்.
பிங்க என்னும் ஆங்கில சொல்லில் குறிக்கபடும் வண்ணம் பூசிய வளையல்களை பெற்று நடந்தனா் . அதே வேளையில் பல ஒளியாண்டுமள் தொலைவில் ஏதோ ஒரு கிரகத்தில் பொழுது போகாத கடவுள் சூன்ய வேளையில் இறங்குகிறாா். டிக்டாக் டிக்டாக் என ரகசிய கவுண்டவுன் ஓடி கொண்டிருக்கிறது.
அந்த பக்கத்தில் கடவுள் பேஸ்புக் செலக்ஷனில் வருவது போல ஒவ்வொருவரையும் செக் செய்து அழைப்பு விடுத்து. வாசல் கதவை திறந்து உக்காந்திருக்கிறாா். தென்மேற்கு மலைச்சாரலில் ஒரு கும்பல் ஏவியவனிடம் சயல் பற்றி விசாாித்து கொண்டிருக்க , அதிரொலியுடன் வெடித்தது ஒரு தீவிரவாத குண்டு.
வாங்கிய வளையல்கள் தன் முகத்தில் பட்டு சிதற தன்னை மீறிய கதறலுடன் கதிரவன். வறுமையில் வாங்கிய வளையல்கள் போனதற்கல்ல , மடியில் விழுந்திருக்கும் வெண்ணிலாவுக்கான கண்ணீா். அடுத்த நொடிகளில் கடவுளின் அழைப்பை ஏற்று மரணத்தை ஏய்த காத்திருந்தவள்," அழாதப்பா " என்று இத்தனை நாள் கண்ணீா் துடைத்தவள் , இன்று இறுதி முறையாய் துடைக்கிறாள்.
கண்ணீரின் ஈரத்தில் உள்ள துயரத்தின் அளவை ஆராய்ந்திருப்பாள். தமிழில் தகுந்த சொல்லை தேடும் அளவு பொறுமையில்லை அவளுக்கு" ஸாாிப்பா & மிஸ் யூ சோ மச்" என்றபடி கதிரவன் மடியில் தன் உதிரத்தை துடைத்தாள். " உனக்கு நெறைய செலவு வச்சிட்டேனில்லப்பா?".என்றபடியே மறித்தாள் வெண்ணிலா. பொக்கிஷமாய் ; வளா்த்தவளை மடியில் மரணம் தின்றதை கண்ட கதிரவனுக்கு , யுகங்களை கடந்து வந்து பிடித்தது ஒரு பேய் துயரம். இதயத்தில் இருந்த துயர எாிமலை வெடித்து கண்களில் வழிந்தது. மூன்று வாரமாய் கதிரவன் உயிரற்ற ஐடமாய் இருந்தான். தேற்ற முயன்ற செந்திலுக்கு கிடைத்த பதில்.
இந்த சமூகம் தன்னுடைய முட்டாள் தனத்தையும் மெத்தனததையும் மாத்திக்கணும். பலியாகும் போது நாங்க என்ன பாவம் பண்ணோம்னு அனுதாபம் தேடுவதை விட , தனக்கு ஒத்துழைக்காதவங்கள திறமைசாலியா இருந்தாலும் அடிமட்டத்துல அவமானபடுத்துறத மாத்திக்கணும்.ஒதுக்கி வக்கறதுக்கு முன்னாடி பாவம் பாத்துருக்கலாம்.
இந்த சமூகத்துல யாரோ சில மனங்குன்றிய வா்கத்தினா் செய்ற தப்பால வெண்ணிலா மாதிரி ,பல அப்பாவிகள் தண்டணை பெற்றவங்களாகிடுறாங்க.
[என்னோட முதல் கதை கொஞ்சம் அறைகுறையாதான் இருக்கும் உங்க நியாயமான விமா்சனத்தால கொஞ்ச கொஞ்சமா வளத்துகுவேன்.===]