இதயங்களும் இயந்திரங்களும்
நேரம் போகவில்லை என்ற நிலமை மாறி இன்று நேரம் போதவில்லை என்று சொல்கிறார்கள். எதற்கு நேரம் போதவில்லை என்று கேட்டால் வேலை செய்வதற்கு நேரம் போதவில்லை படிப்பதற்கு நேரம் போதவில்லை என்கிறார்கள்.
நேரம் என்றுமே சரியாகத்தான் சுழலுகிறது, ஆனால் மனித மனங்களின் சுழற்சிதான் தாறுமாறாக உள்ளது. கணினியுடன் மணிக்கணக்கில் உறவாடுகிறார்கள். கைபேசியுடன் மணிக்கணக்கில் உலாவுகிறாா்கள். ஆனால் மனித மனங்களுடன் உறவாட மட்டும் நேரம் கிடைப்பதில்லை.
உடன்பிறந்த உறவுகளும், உடன் பிறவாத உறவுகளும், இரத்த உறவுகளும், இரத்த பந்தமில்லாத உறவுகளும், பாசமுள்ள உறவுகளும், பாசமில்லாத உறவுகளும் மலிந்து விட்ட இந்த உலகத்தில் யாரையும் புரிந்து கொள்ள முடிவதும் இல்லை, பிரிந்த உறவுகள் இணையும்போது மகிழ்ச்சி உருவாகும்
இணைந்திருக்கும் உறவுகள் பிரியும்போது துக்கமும் விரோதமும் உருவாகும் இது மனித இயல்பு.
மனிதர்களுடன் உறவாட மனிதர்களுக்கு இப்போது நேரம் கிடைப்பதில்லை. ஏனென்றால் அவர்களது நேரங்களை இயந்திரங்கள் நேசிக்கின்றன. இயந்திரங்களை நேசிக்கிறவர்கள் இதயத்தை நேசிக்க யோசிக்கிறாா்கள்
அழகிய வீடு ஒன்றைக் கட்டிவிட்டு அதற்குள் மனிதன் மிருகங்களை வளர விடுகிறான். மனித மனங்கள் மிருகங்கள் அல்ல சுய சிந்தையுடன் வாழும் ஆறறிவு ஜீவன்கள்.
இறைவன் மனிதனுக்கு கொடுத்த தானம் அன்பு, அதை இன்னொரு இதயத்திற்கு சிறிது வழங்க மனிதன் யோசிக்கிறான்,
மனித மனங்கள் இப்போது முன்பு போல் ஜொலிப்பதில்லை. ஏனென்றால் நேசிக்க இதயம் கிடைப்பதில்லை. சாலைகளில் நடந்து செல்ல செருப்புகள் விட்டுக்கொடுப்பதில்லை. கணினிகள் கால்களை இழுக்கின்றன, தொலைக்காட்சிப்பெட்டிகள் ஈா்க்கின்றன.
மனித மனங்கள் இப்போது யோசிக்கின்றன. மனநல மருத்துவரின் கைபேசி எண்களை அழுத்துகின்றன, பதில் கேட்கிறது - "மனித மனங்களை புரிந்து கொண்டு நேசியுங்கள் என் கபட முகத்திரைகளை கிழித்துவிட்டு உண்மையாய் நேசியுங்கள் என் இயந்திரங்களுக்கு ஓய்வு கொடுங்கள்" என மனித மனங்கள் எவ்வளவு கேட்டாலும் ஏற்றுக்கொள்வதில்லை.
இதயங்கள் இப்போது மனச் சுமைகளில்சிக்கித் தவிக்கின்றன. விடுமுறை நாட்களில் மனச்சுமைகள் தள்ளாடுகின்றன. ஏனென்றால் மனிதா்களுக்கு இப்போது பேச நேரம் கிடைப்பதில்லை.
குளத்தை ரசிக்க கண்கள் மறுப்பு தெரிவிப்பதில்லை. கடலைப் பார்த்தால் கால்கள் நனைக்க கால்கள் நனைக்க கால்கள் மறுப்பு தெரிவிப்பதி்ல்லை. இதயங்களை நேசிக்கத்தான் இதயங்கள் இடம் கொடுப்பதி்ல்லை, தன்மானம் விட்டுக் கொடுக்கவில்லை.
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை
கெட்டுப்போகிறவன் விட்டுக் கொடுப்பதி்ல்லை.

