கவிதை

உணர்வுகளின் சுயசரிதை

இறப்பின் வலியை
இதமாய் உணர்த்தும் பிரத்தியட்சம்

எண்ணக் கழிசடையில்
உணர்வுகளின் அடைசல் அடையாளங்கள்

சலிப்பின் உச்சக் கட்ட சோம்பல்
ஓய்வில் விடும் கொட்டாவி அசரீரி

பொருளான சொல்லே
பொருளைத் தேடும்
முடிவில்லா தொடர் நிகழ்வு

அந்தரத்தில் இருக்கும்
அர்த்த அந்தரங்கத்தின் அகராதி

உணர்வை அனுபவமாய்
ஐயமின்றி அனுமதிக்கும் அனுசரணை

உணர்வை சுத்திகரிக்கும்
ஒலி அழுக்கு

உடலில் இருக்கும் உயிர் வலிக்கு
உணர்வுகள் தரும் இதமான ஒத்தடம்

இறந்த கடவுளுக்காய்
மனிதன் விடும் ஏக்கப் பெருமூச்சு

அறிவு தோண்டி எடுத்த
உணர்வுப் புதையல்

பேரமைதியில் அதிர்வை உண்டு பண்ணி
எச்சரிக்கும் உணர்வு

உயர்ந்தது சிறந்தது நிகரற்றது என்று
தன்னைத் தானே ஏமாற்றி ஏமாறும் உணர்வு

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (28-Mar-15, 7:59 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kavithai
பார்வை : 87

சிறந்த கவிதைகள்

மேலே